Type Here to Get Search Results !

KAVIMANI DESIGAVINAYAGAM PILLAI IMPORTANT POINTS FOR TNPSC TET TRB EXAM தேசிய விநாயகம் PDF



KAVIMANI DESIGAVINAYAGAM PILLAI  IS UNDER THE SYLLABUS OF TNPSC GROUP 2 , TNPSC GROUP 2A. TNPSC GROUP 4, TNPSC GROUP 7 ,TNPSC VAO AND TNTET ,TRB EXAMS..

SEARCHING KEYWORD : POTHU TAMIL STUDY MATERIALS , POTHU TAMIL MATERIALS TAMIL PDF. TNPSC  TAMIL  MATERIALS,TNPSC GROUP 2 POTHU TAMIL MATERIALS , TNPSC GROUP 2A POTHU TAMIL STUDY MATERIALS. TNPSC GROUP 4 POTHU TAMIL STUDY MATERIALS, TNPSC GROUP 7 POTHU TAMIL STUDY MATERIALS ,TNPSC VAO POTHU TAMIL STUDY MATERIALS .TNTET POTHU TAMIL STUDY MATERIALS ,TRB EXAMS POTHU TAMIL STUDY MATERIALS.


கவிமணி தேசிய விநாயகம்KAVIMANI DESIGAVINAYAGAM PILLAI


                        கவிமணி தேசிய விநாயகம்  ( ஜுலை 27, 1876 - செப்டம்பர் 26, 1954) கன்னியாகுமரி  மாவட்டத்தில் தேரூர் என்னும் ஊரில் சிவதாணுப்பிள்ளை - ஆதிலட்சுமி க்கு  ஜுலை 27, 1876 அன்று பிறந்தார். உமையம்மை எனும் பெண்ணை 1901 ல் மணம் முடித்தார்.  எட்வின் ஆர்னால்டின் 'ஆசிய ஜோதி' யைத் தமிழில் தழுவி எழுதினார்.

 பாரசீகக் கவிஞர் உமர் கய்யாம் பாடல்களான இம்மை பற்றிய ரூபாய்த் (4 அடி செய்யுள் ) தழுவி தமிழில் எழுதினார். ஆராய்ச்சித் துறையிலும் தேசிக விநாயகம் பிள்ளை பல அரிய பணிகளை ஆற்றியிருக்கிறார். 1922-இல் 'மனோன்மணியம் மறுபிறப்பு' என்ற திறனாய்வுக் கட்டுரையை எழுதினார். சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரகராதி உருவாக்கத்தில் மதிப்பியல் உதவியாளராக இருந்தார். கம்பராமாயணம் திவாகரம், நவநீதப் பாட்டியல் முதலிய பல நூல்களின் ஏட்டுப் பிரதிகளைத் தொகுத்திருக்கிறார். 'காந்தளூர்ச்சாலை' பற்றிய ஆய்வு நூலை எழுதினார்.

சிறப்பு பெயர்
கவிமணி, குழந்தை கவிஞர்

படைப்புகள்
அழகம்மை ஆசிரிய விருத்தம், ஆசிய ஜோதி , மலரும் மாலையும், மருமக்கள்வழி மான்மியம், கதர் பிறந்த கதை, உமார் கய்யாம் பாடல்கள், தேவியின் கீர்த்தனங்கள், குழந்தைச்செல்வம், கவிமணியின் உரைமணிகள்.

சிறந்த தொடர்கள்
“ ஆமை வடைக்காய் அரைஞான் பணயம் “
“ அப்பா எழுந்திரையா... அரசே எழுந்திரையா “
-     குழந்தை செல்வம் ( துயில் எழுப்புதல் )
“ தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு அங்கே

துள்ளிக் குதிக்குது கன்றுக் குடடி
அம்மா என்குது வெள்ளைப் பசு “

“ ஓடும் உதிரத்தில் வடிந்து

ஒழுகும் கண்ணீரில்
தேடித் பார்த்தாலும் சாதி
தெரிவதுண்டோ அப்பா?

“ உள்ளத்துள்ளது கவிதை இன்பம்
உருவெடுப்பது கவிதை

தெள்ளத் தெளிந்த தமிழில் உண்மை
தெரிந்து ரைப்பது கவிதை “

“ மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல
மாதவம் செய்திட வேண்டும் அம்மா “
கவிமணி பற்றி

இனிய தமிழில் எவரும் விளங்கப் பாடல் இயற்றும் திறம் மிக்கவர்
ரசிகமணி டி.கே.சி = தேசிய விநாயகம் பிள்ளையின் பாடல்கள் தமிழ் மக்களுக்குக் கிடைத்த பெருஞ் செல்வம்; அறிய செல்வம், தெவிட்டாத அமிர்தம்; ஆயுள் நாள் முழுவதும் தமிழ் மகன் தன்னுடன் வைத்துக் கொண்டு அனுபவிக்கத் கூடிய வாடாத கற்பகப்பூச்செண்டு
நாமக்கல் கவிஞர் = தேசிய விநாயகத்தின் கவிப்பெருமை தினமும் கேட்பது என்செவிப் பெருமை
டி.கே.சண்முகம் =  கவிமணியின் கவிதைகளைப் புரிந்து கொள்வதற்குப் பண்டிதராக வேண்டியதில்லை; படிக்கத் தெரிந்த எவரும் பொருள் கொள்ளத்தக்க எளியநடை
மு.வரதராசனார் = போராட்டமும் பரபரப்பும் மிகுந்த காலத்தில் வாழ்ந்த போதிலும் அவருடைய உள்ளமும், கவிதைகளும் அமைதியும் இனிமையும் உடையனவாக விளங்கியது விந்தையே

நாமக்கல் கவிஞர் = துரும்பென மெலிந்த தேகம், துலங்கிடும் குளிர்ந்த பார்வை, இரும்பினும் வலிய உள்ளம், இனியவே செய்யும் எண்ணம், பரம்பொருள் நினைவே காட்டும் பாரெல்லாம் பரந்த நோக்கம், கரும்பினும் இனிய சொற்கள், கவிமணி வடிவம் ஆகும்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel