
9th NOVEMBER 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
இந்தியா – மியான்மர் இடையேயான முதலாவது இருதரப்பு முப்படைகளின் கூட்டுப்பயிற்சி
- இந்தியா – மியான்மர் இடையேயான முதலாவது இருதரப்பு முப்படைகளின் மனிதநேய உதவி மற்றும் பேரிடர் நிவாரண கூட்டுப் பயிற்சியான ரஹத் மித்ரா சென்னையில் 2026 நவம்பர் 5, 6-ம் தேதிகளில் நடைபெற்றது.
- இந்த 2 நாள் பயிற்சியில் இந்திய ராணுவம், இந்தியக் கடற்படை, இந்திய விமானப்படை ஆகியவற்றைச் சேர்ந்த வீரர்களும், மியான்மர் பாதுகாப்புப்படையினரும் பங்கேற்றனர். பேரிடர் காலங்களில் ஒருங்கிணைந்து செயல்படும் திறனை மேம்படுத்துதல், சிறந்த நடைமுறைகளைப் பரிமாறிக்கொள்ளுதல் ஆகியவை குறித்தும் பயிற்சியில் கவனம் செலுத்தப்பட்டது.
- இப்பயிற்சி, கூட்டுத் திட்டங்கள், மனிதநேய உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் செயல்பாட்டுத்திறன்களை அறிந்துகொள்வதுடன் தொடங்கியது.
- கடும் புயல் சூழலின்போது மேற்கொள்ளப்பட வேண்டிய ஒருங்கிணைந்த மீட்பு நடவடிக்கைகள், பேரிடர் மேலாண்மை நடைமுறைகளை குறித்து விவாதிக்கப்பட்டது.
- அத்துடன் இந்திய ராணுவத்தின் சார்பில் தடைகளை களைதல், தற்காலிகப் பாலங்களை அமைத்தல் தொடர்பான செயல்முறை விளக்கங்களை வீரர்கள் பார்வையிட்டனர்.
- இந்திய கடற்படையின் மனிதநேய உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் குறித்து அறிந்துகொள்ள ஐஎன்எஸ் சுகன்யா கப்பலையும் அவர்கள் பார்வையிட்டனர்.

