
5th NOVEMBER 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
வெற்றி சிறப்பு காய்கறித் தொகுப்பு திட்டத்தில் விற்பனையை அமைச்சர் காந்திராஜ் தொடங்கி வைத்தார்
- சென்னை வில்லிவாக்கம் பகுதியில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், அமைச்சர் காந்திராஜ் 'வெற்றி சிறப்பு காய்கறித் தொகுப்பு' விற்பனையைத் தொடங்கி வைத்தார்.
- பொதுமக்கள் தங்களின் வீடுகளுக்கு அருகிலேயே எளிதாகக் காய்கறிகளைப் பெறும் வகையில், பச்சைக்கொடி அசைக்கப்பட்டு நடமாடும் காய்கறி வாகனச் சேவைகளும் இத்துடன் தொடக்கி வைக்கப்பட்டன.
- தீபாவளிக் காலத்தில் காய்கறிகளின் விலை உயர்வால் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் பொருட்டு இத்திட்டம் அரசு சார்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
- ஒட்டுமொத்தமாகச் சுமார் 2.5 கிலோவிற்கும் அதிகமான எடைகொண்ட 10 அத்தியாவசியச் சமையல் பொருட்கள் வெறும் 100 ரூபாய்க்கு இத் தொகுப்பில் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

