
19th NOVEMBER 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
பிரதமர் நரேந்திர மோடி ஃபிக்கி வருடாந்திர பொதுக்கூட்டம், மாநாட்டை தொடங்கிவைத்தார்
- இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் (ஃபிக்கி) வருடாந்திர கூட்டத்தையும், மாநாட்டையும் பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லி பாரத் மண்டபத்தில் இன்று தொடங்கி வைத்தார்.
- அப்போது ஃபிக்கியின் நூற்றாண்டு விழாவையொட்டி கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய அவர், இதற்கு முன்பும் பலமுறை ஃபிக்கி நிகழ்ச்சிகளில் தாம் பங்கேற்றிருந்தாலும் இந்த நூற்றாண்டு அம்சம் மிகவும் சிறப்பானது என்று கூறினார்.
- கடந்த 100 ஆண்டுகளாக விழிப்புணர்வுடன் செயல்பட்டு, காலத்திற்கேற்ப மாற்றிக்கொண்டு இந்தியப் பொருளாதார பயணத்திற்கு ஃபிக்கி ஆற்றிய பங்களிப்பை அவர் பாராட்டினார்.
- மியான்மர் நாட்டின் ராகைன் மாநிலத்தில், கடந்த 2017 ஆகஸ்ட் மாதம் ரோஹிங்கியா கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான நடவடிக்கை எனக் கூறி மியான்மர் ராணுவப்படைகள் வன்முறை நடவடிக்கைகளை மேற்கொண்டன.
- இதில், ஆயிரக்கணக்கான ரோஹிங்கியா மக்கள் கொல்லப்பட்டதுடன், லட்சக்கணக்கானோர் மியான்மரை விட்டு வெளியேறி இந்தியா, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் அகதிகளாகத் தஞ்சமடைந்துள்ளனர்.
- இதனைத் தொடர்ந்து, முஸ்லீம்கள் அதிகமுள்ள சிறுபான்மை சமூகத்தினரான ரோஹிங்கியா மக்களுக்கு எதிராக மியான்மர் அரசு மேற்கொண்ட வன்முறைகள் குறித்து இன்று (நவ. 19) நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
- இந்த விசாரணையில், 10,000-க்கும் அதிகமான ரோஹிங்கியா மக்களை மியான்மர் அரசு கொலை செய்ததற்கு ஆதாரம் இருப்பதாக, நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
- இந்த நிலையில், ராகைன் மாநிலத்தில் ரோஹிங்கியா மக்களுக்கு எதிராக மியான்மர் இனப்படுகொலையில் ஈடுபட்டு, இனப்படுகொலை உடன்படிக்கையின் கீழ் கட்டுப்பாடுகளை மீறியுள்ளது என சர்வதேச நீதிமன்றத் தலைவர் யுஜி இவாசாவா தெரிவித்துள்ளார்.
- 2026 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள நவி பிள்ளை உள்ளிட்ட 15 நீதிபதிகள் இடம்பெற்ற சர்வதேச நீதிமன்றத்தில், 9-6 எனும் வாக்குகளின் அடிப்படையில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
- இந்தியா மற்றும் மலேசியா இடையிலான 6-வது கூட்டு ராணுவப் பயிற்சியான ‘ஹரிமாவ் சக்தி-6’, மலேசியாவின் ஈப்போவில் இன்று (நவம்பர் 19, 2026) தொடங்கியது.
- நவம்பர் 30-ம் தேதி வரை நடைபெறும் இப்பயிற்சியில் இரு நாடுகளையும் சேர்ந்த தலா 120 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்தியா மற்றும் மலேசியாவில் சுழற்சி முறையில் நடத்தப்படும்.
- இப்பயிற்சி, ஐநா சபையின் சாசனம் அத்தியாயம் 7-ன் கீழ், வனப்பகுதி மற்றும் நகர்ப்புறத்தை ஒட்டிய பகுதிகளில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைந்து மேற்கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- பல்வேறு கட்டங்களாக நடைபெறும் இப்பயிற்சியில் கூட்டுக் கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பு மையம் அமைத்தல், அதிரடி தாக்குதல்கள், தேடுதல் நடவடிக்கைகள், போர் பொறியியல் பயிற்சிகள் மற்றும் உளவு பார்த்தலுக்கான ஆளில்லா வான்வழி அமைப்புகள் (UAS), எதிரி ட்ரோன்களைக் கண்டறிந்து அழிக்கும் தொழில்நுட்பங்கள் (C-UAS) ஆகியவற்றைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பயிற்சிகள் இடம்பெறுகின்றன.
- கூட்டுப் பயங்கரவாத எதிர்ப்பு ஒத்திகையுடன் நிறைவடையும் இப்பயிற்சி, இரு நாட்டு ராணுவங்களிடையே சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ளவும், ஒருங்கிணைந்த செயல்பாட்டுத் திறன், இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய அமைதியை வலுப்படுத்தவும் வழிவகுக்கும்.

