//
Type Here to Get Search Results !

18th NOVEMBER 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

TODAY TNPSC CURRENT AFFAIRS 2026 TNPSCSHOUTERS TAMIL & ENGLISH PDF

18th NOVEMBER 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

தமிழக காவல்துறையில் புதிய இ-சிஎஸ்ஆர் வசதி அறிமுகம்
  • தமிழக காவல்துறையில் பொதுமக்கள் காவல் நிலையத்திற்குச் நேரில் செல்லாமலேயே ஆன்லைன் மூலம் புகார் அளிக்கும் வகையில், மின்னணு சமூக சேவைப் பதிவேடு (e-CSR) வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • சென்னை காவல்துறை தலைமை இயக்குநரும், சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவின் தலைமைப் பொறுப்பு அதிகாரியுமான டிஜிபி மாகேஷ் குமார் அகர்வால், மாநில குற்ற ஆவணக் காப்பகத்தின் டிஜிபி முன்னிலையில் இந்தப் புதிய வசதியைத் தொடங்கி வைத்தார்.
  • இதன்படி, பொதுமக்கள் தமிழக காவல்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.police.tn.gov.in என்ற முகவரியில் தங்களது புகார்களை ஆன்லைனில் பதிவு செய்யலாம். புகார் பதிவு செய்யப்பட்டவுடன் அதற்கான e-CSR ஒப்புதல் ரசீதும் வழங்கப்படும்.
  • ஆன்லைனில் பெறப்படும் புகார்களில் எத்தனை புகார்கள் முதல் தகவல் அறிக்கையாக (FIR) மாற்றப்பட்டுள்ளன, அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன என்பதை உயர் அதிகாரிகள் கண்காணிக்க முடியும்.
  • மேலும், அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களில் செல்போன் மற்றும் இருசக்கர வாகனத் திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் தொடர்பாக ஆன்லைனில் புகார் அளிக்கும் வகையில் புதிய இணையதள வசதிகளும் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel