//
Type Here to Get Search Results !

17th NOVEMBER 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

TODAY TNPSC CURRENT AFFAIRS 2026 TNPSCSHOUTERS TAMIL & ENGLISH PDF

17th NOVEMBER 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

23வது இந்தியா – ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் பங்கேற்றார்
  • பிரதமர் திரு நரேந்திர மோடி பிலிப்பைன்ஸ் அதிபர் திரு ஃபெர்டினான்ட் ஆர் மார்கோஸ் ஜூனியரின் அழைப்பின் பேரில் இன்று மணிலாவில் நடைபெற்ற 23-வது இந்தியா – ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்றார்.
  • ‘நமது எதிர்காலத்தை ஒருங்கிணைந்து வழிநடத்துதல்’ என்ற தலைப்பின் கீழ் ஆசியான் அமைப்பின் வெற்றிகரமான தலைமைப் பொறுப்பை ஏற்றதற்கும் ஒருங்கிணைப்பாளராக இந்தியாவிற்கு ஆதரவு அளித்ததற்காகவும் அதிபர் திரு மார்கோஸூக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.
  • ஆசியானின் ஒற்றுமைக்கு இந்தியா உறுதியுடன் இருப்பதாக கூறிய அவர், ஆசியான் சமூக தொலைநோக்குப் பார்வை 2045, வளர்ச்சியடைந்த இந்தியா 2047 ஆகியவை இந்தியா, ஆசியான் நாடுகளின் மக்களின் பொதுவான விருப்பங்களை நிறைவேற்ற உதவிடும் என்று குறிப்பிட்டார்.
  • 2027-ம் ஆண்டு இந்தியா – ஆசியான் உறவுகளில் சிறப்பான ஆண்டாக அமையும் என்றும், இருதரப்பினரும் தங்களுடைய 35 ஆண்டுகால உறவையும் 5 ஆண்டுகால விரிவான உத்திசார் நட்பையும் கொண்டாடுவார்கள் என்று பிரதமர் கூறினார்.
  • இந்தியா – ஆசியான் இடையேயான உறவுகளை வலுப்படுத்த பிரதமர் பல்வேறு முன்மொழிவுகளை பரிந்துரைத்தார்.
  • போக்குவரத்து, அறிவியல் ஆராய்ச்சி, பேரிடர் மேலாண்மை, கடலோர காவல்படை ஒத்துழைப்பு, கடல்சார் விழிப்புணர்வு, மாலுமிகளின் பாதுகாப்பு ஆகியவற்றை மேம்படுத்த நீண்டகால ஆசியான் – இந்தியா கடல்சார் ஒத்துழைப்புத் திட்டம்.
  • இப்பிராந்தியத்தில் திறன் மேம்பாட்டிற்காக சைபர் தடய அறிவியல், கூட்டுப் பயிற்சித் திட்டம்.
  • ஆசியான் – இந்தியா அணுசக்தி தொழில்நுட்ப பரிமாற்றங்கள்.
  • ஆசியான் – இந்தியா விண்வெளி ஹேக்கத்தான்.
  • சுரங்கம், முக்கிய கனிமங்களில் ஆசியான் – இந்தியா இடையே ஒத்துழைப்பு உள்ளிட்டவற்றை பிரதமர் பரிந்துரைத்தார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel