
16th NOVEMBER 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
வங்கக்கடலில் அக்வான் புயல் உருவானது
- வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 'அக்வான்' புயலாக உருவானது. இது மேலும் வலுவடைந்து நாளை மாலை தீவிர புயலாகவும், 19ம் தேதி காலை மிக தீவிர புயலாகவும் வலுப்பெற்று ஆந்திராவின் நெல்லூர் -துனி இடையே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
- சர்வதேச வானிலை அமைப்பின் சுழற்சி முறைப்படி, இந்தப் பெயரை ஈரான் நாடு பரிந்துரைத்துள்ளது. பாரசீக மொழியில் 'அக்வான்' என்பதற்கு 'அசுரன்' அல்லது 'தீய சக்தி' என்று பொருள் என்பது குறிப்பிடத்தக்கது.
- 2026 அக்டோபர் மாதத்திற்கான தற்காலிக மொத்த விலைக் குறியீடு அடிப்படையிலான பணவீக்கம் முந்தைய ஆண்டின் அடிப்படையில் 12.29 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.
- இது 2026 செப்டம்பர் மாதத்தில் 11.39 சதவீதமாக இருந்தது. அனைத்துப் பொருட்களுக்கான குறியீட்டு எண் செப்டம்பரில் 112.5 ஆக இருந்த நிலையில், அக்டோபரில் 113.3 ஆக உயர்ந்துள்ளது.
- முக்கியப் பிரிவுகளைப் பொறுத்தவரை, உணவுப் பொருட்களை உள்ளடக்கிய முதன்மைப் பொருட்கள் 9.24 சதவீதமும், எரிபொருள், மின்சாரம் 32.84 சதவீதமும், உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் 9.54 சதவீதமும் பணவீக்கத்தைப் பதிவு செய்துள்ளன.
- உணவுப் பொருட்கள் குறியீட்டின் பணவீக்கம் செப்டம்பரில் 8.66 சதவீதத்தில் இருந்து, அக்டோபரில் 8.58 சதவீதமாக குறைந்துள்ளது. கச்சா பெட்ரோலியம் சுத்திகரிப்பின் போது பெறப்படும் கனிம எண்ணெய்கள், கச்சா பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, மின்சாரம், உணவுப் பொருட்கள், அடிப்படை உலோகங்கள், ரசாயனப் பொருட்கள் ஆகியவற்றின் விலை உயர்வு இந்தப் பணவீக்கத்திற்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.
- இதனிடையே, 2026 ஆகஸ்ட் மாதத்திற்கான இறுதி மொத்த விலைக் குறியீடு 110.8 ஆகவும், பணவீக்கம் 9.92 சதவீதமாகவும் மாற்றமின்றித் தொடர்கிறது.
- மேலும், 2026 அக்டோபர் மாதத்திற்கான அனைத்துப் பொருட்களுக்குமான தற்காலிக வெளியீட்டு உற்பத்தியாளர் விலைக் குறியீடு 113.3 ஆகவும், உற்பத்தித் துறைக்கான சோதனை அடிப்படையிலான உள்ளீட்டு உற்பத்தியாளர் விலைக் குறியீடு 108.2 ஆகவும் பதிவாகியுள்ளது.

