
12th NOVEMBER 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
கேந்திரிய வித்யாலயா அமைப்பின் முன்னோடி டிஜிட்டல் திட்டங்களை மத்திய கல்வி அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி தொடங்கி வைத்தார்
- மத்திய கல்வி அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி, கேந்திரிய வித்யாலயா அமைப்பின் 3 முன்னோடி டிஜிட்டல் திட்டங்களை புதுதில்லியில் இன்று (2026 நவம்பர் 12) தொடங்கி வைத்தார்.
- செயற்கை நுண்ணறிவுடன் ஒருங்கிணைக்கப்பட்ட ‘சமிக்ஷா’ செயற்கை நுண்ணறிவு செயலி, பெற்றோர்களை இணைக்கும் கேவிஎஸ்-சம்வாத் கைப்பேசி செயலி, இணையதளம், கேவிஎஸ் முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைப்புக்கான இணையதளம் ஆகியவை இதில் அடங்கும்.
- ‘சமிக்ஷா’ செயற்கை நுண்ணறிவுத் தளம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகைப்பதிவு, கல்வித் திறன், பள்ளி உள்கட்டமைப்பு குறித்த நிகழ்நேரத் தரவுகளை பகுப்பாய்வு செய்து உரிய முடிவுகளை எடுக்க உதவுகிறது.
- கேவிஎஸ் சம்வாத் செயலி மூலம் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் வருகைப்பதிவு, பாடத்திட்ட முன்னேற்றம், தேர்வு முடிவுகள், டிஜிட்டல் அடையாள அட்டைகளைப் பெறுவதுடன், சான்றிதழ்கள், விடுப்பு ஆகியவற்றிற்கும் இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.
- முன்னாள் மாணவர்களுக்கான இணையதளம் மூலம் முன்னாள் மாணவர்கள் தங்கள் பள்ளிகளுடன் மீண்டும் இணைந்து வழிகாட்டுதல், நிறுவன மேம்பாட்டிற்குப் பங்களிக்க முடியும்.
- கேந்திரிய வித்யாலயா தலைமையகத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவால் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ள இத்தளங்கள், கல்விச் சேவைகளை எளிதாகவும், வெளிப்படையாகவும் மாற்றுகின்றன.
- வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களில் பலர் இந்தியாவில் திருமணம் செய்துவிட்டு அதை வெளிநாடுகளில் விவாகரத்து செய்கிறார்கள்.
- இந்நிலையில்தான் ஒரு பெண் வெளிநாட்டு (பிரிட்டிஷ்) குடியுரிமை பெற்று இரண்டாவது திருமணம் செய்த தனது கணவரின் மீது இருதார மனம் செய்ததாக இந்திய உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் வழக்கு தொடர்ந்தார்.
- இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. இந்தியாவில் நடைபெற்ற திருமணத்திற்கு வெளிநாடுகளின் தாரளவாத சட்டங்களை பயன்படுத்தி அங்குள்ள நீதிமன்றங்களில் விவாகரத்து பெறுவது இந்திய சட்டப்படி செல்லுபடி ஆகாது என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
- வெளிநாட்டு நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்றுவிட்டு அதன் அடிப்படையில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டால் இந்திய சட்டப்படி முதல் திருமணம் தொடர்ந்து நீடிப்பதாகவே கருதப்படும்.
- எனவே அந்த நபர் மீது 'இருதார மணம்' ( IPC - 494) செய்ததாக குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
- மேலும், விவாகரத்து பெற்று இரண்டாவது திருமணத்தை செய்யும் போது சம்பந்தப்பட்ட நபர் வெளிநாட்டு குடியுரிமை பெற்றிருந்தாலும் இரண்டாவது திருமணம் வெளிநாட்டில் நடந்திருந்தாலும் கூட இந்தியாவில் இந்து முறைப்படி நடந்த முதல் திருமணத்தின் சட்டவிளைவுகளில் இருந்து அவர் தப்பிக்க முடியாது எனவும் நீதிபதிகள் அதிரடி தீர்ப்பளித்துள்ளனர்

