//
Type Here to Get Search Results !

11th NOVEMBER 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

TODAY TNPSC CURRENT AFFAIRS 2026 TNPSCSHOUTERS TAMIL & ENGLISH PDF

11th NOVEMBER 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

நொய்டாவில் 8.449 கிலோ மீட்டர் தொலைவிற்கு மெட்ரோ ரயில் வழித்தடத்தை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • நொய்டா மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ் நொய்டா செக்டர் 51-லிருந்து கிரேட்டர் நொய்டா செக்டர் 4 வரை 8.449 கிலோ மீட்டர் தொலைவிற்கு ஐந்து மேம்பால நிலையங்களுடன் விரைவு மெட்ரோ ரயில் வழித்தடத்தை நீட்டிப்பதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது. 
  • இந்த வழித்தடம் செயல்பாட்டிற்கு வரும்போது நொய்டா, கிரேட்டர் நொய்டா நகரங்களில் 71.878 கிலோ மீட்டர் தொலைவிற்கு மெட்ரோ ரயில் கட்டமைப்பு இருக்கும்.
  • நொய்டா மெட்ரோ ரயில் திட்டத்தின் ஒரு பகுதியாக நொய்டா செக்டர் 51லிருந்து கிரேட்டர் நொய்டா செக்டர் 4 வரை விரைவு மெட்ரோ ரயில் வழித்தடத்தை நீட்டிப்பது என்பது நகரத்தின் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் ஒரு சிறந்த முன்னேற்றத்தை குறிப்பிடுகிறது. இத்திட்டம் அந்நகரத்தில் மெட்ரோ ரயில் கட்டமைப்பில் பெரிய விரிவாக்கமாக அமைகிறது.
குறு நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாத நிதியத்தை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • குறு நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாத நிதியத்தை 2031-ம் ஆண்டு மார்ச் 31 வரை ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 
  • இத்திட்டம் தேசிய கடன் உத்தரவாத அறக்கட்டளை நிறுவனம் மூலம் கடன் அளிக்கும் நிறுவனங்களுக்கு வாராக்கடன் அபாயத்திற்கு எதிரான உத்திரவாத்தை அளிக்கிறது.
  • பிரதமரின் முத்ரா திட்டம் தொடங்கப்பட்டது முதல் 2026 செப்டம்பர் வரை கடன் வழங்கும் நிறுவனங்கள் மூலம் ரூ.60.36 கோடிக்கும் அதிகமான கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றின் மதிப்பு ரூ.43.34 லட்சம் கோடி ஆகும். 
  • 2016 ஜனவரியில் தொடங்கப்பட்ட குறு நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாத நிதியம் பிரதமரின் முத்ரா திட்டக் கடன்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பதில் முக்கிய காரணியாக உள்ளது.
  • இத்திட்டத்தின் கீழ் தகுதியுடைய குறு நிறுவனங்களுக்கு ரூ.20 லட்சம் வரை கடன்கள் வழங்கப்படுகிறது. பிரதமரின் ஜன்தன் கணக்குகளின் கீழ் வங்கியால் அளிக்கப்படும் ரூ.10,000 வரையிலான கூடுதல் கடன் வசதி, சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரையிலான கடன் வசதி அளிக்கப்படும். 
  • கடன் வழங்கும் நிறுவனங்களின் உரிய அபாய அளவை பிரதிபலிக்கும் வகையில் செயல்பாட்டு மூலதன வரம்புகளுக்கு அளிக்கப்பட்ட தொகையுடனும், காலக் கடன்களுக்கு நிலுவையில் உள்ள தொகைகளுடனும் இந்த உத்தரவாத பாதுகாப்பு இணைக்கப்பட்டுள்ளது.
ஸ்டாண்ட்-அப் இந்தியா திட்டத்தைத் தொடர்வதற்கும் ரூ.4,111 கோடி மதிப்பிலான கடன் உத்தரவாத நிதியத்திற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • ஸ்டாண்ட்-அப் இந்தியா திட்டத்தை அடுத்த ஐந்து ஆண்டு காலத்திற்கு (31.03.2031 வரை) தொடர்வதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் குழு இன்று ஒப்புதல் வழங்கியது. 
  • இந்தத் திட்டம் பெண்கள், பட்டியலின வகுப்பினர், பழங்குடியின மக்கள் தொழில் முனைவோராக உருவெடுக்க ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
  • இந்தத் திட்டத்தின் கீழ், அடுத்த ஐந்து ஆண்டுகளில் கூடுதலாக இரண்டரை லட்சம் தொழில் முனைவோருக்கு நிதியுதவி வழங்குவதை இலக்காகக் கொண்டு செயல்படுத்தப்பட உள்ளது. 
  • கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாத்தில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து இது வரை 2,75,000-க்கும் அதிகமான பெண்கள், பட்டியலின, பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த தொழில் முனைவோர்களுக்கு கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
  • இத்திட்டத்தின் கீழ் கடன் உத்தரவாத நிதியத்திற்கு ரூ.4,111 கோடி ஒதுக்கீடு செய்வதற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • புதிய தொழில் நிறுவனங்களைத் தொடங்க விரும்பும் பெண்கள், பட்டியலின, பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த தொழில் முனைவோர்களுக்கு உதவித் தொகையாக ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை கூட்டுக் கடன் அல்லது காலமுறை கடனாக நிதியுதவி பெற இந்தத் திட்டம் வகை செய்கிறது. திட்டச் செலவில் 85 சதவீதம் வரை கடன் தொகை பெற முடியும்.
புதுதில்லியில் யுகே யுகீன் பாரத் அருங்காட்சியகம் அமைக்க மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல்
  • புதுதில்லி வடக்கு மற்றும் தெற்கு வளாகத்தில் (நார்த் - சவுத் பிளாக்) யுகே யுகீன் பாரத் அருங்காட்சியகம் அமைக்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • இந்த அருங்காட்சியகம் அமைக்க ரூ.3,230 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் நாகரீக பாரம்பரியம், பன்முகத்தன்மை, வளம், கலாச்சார மரபுகளை வெளிப்படுத்தும் வகையில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது. 
  • வரலாற்றுச் சிறப்புமிக்க வடக்கு மற்றும் தெற்கு வளாகப் பகுதிகளின் தனித்துவமிக்க கட்டடக் கலையையும், பாரம்பரியமிக்க முக்கியத்துவத்தையும் சிதைக்காமல் மக்களுக்கான கலாச்சார மையமாக மாற்றும் வகையில் இந்த அருங்காட்சியகம் வடிவமைக்கப்பட உள்ளது.
  • 1,78,509 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ள இந்த அருங்காட்சியகம் சிறந்த அனுபவத்தை வழங்கும் தொழில்நுட்பங்கள், பார்வையாளர்களை மையமாகக் கொண்ட செயல்விளக்க நடைமுறைகளுடன் ஒருங்கிணைக்கப்பட உள்ளது.
பாஸ்பேட், பொட்டாஷ் உரங்கள் மீதான ஊட்டச்சத்து அடிப்படையிலான மானிய விகிதங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • பாஸ்பேட், பொட்டாஷ் உரங்கள் மீதான ஊட்டச்சத்து அடிப்படையிலான மானிய விகிதங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் குழு இன்று ஒப்புதல் அளித்துள்ளது. 
  • நடப்பு ரபி பருவத்திற்கான (01.10.2026 முதல் 31.03.2027 வரை) மானிய விகிதங்களுக்கு இந்த ஒப்புதல் பொருந்தும். இதற்கான பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.62,370.02 கோடியாகும். இது கடந்த ஆண்டு ரபி பருவத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீட்டைக் காட்டிலும் ரூ.24,417.73 கோடி கூடுதலாகும்.
  • இதன் மூலம் விவசாயிகளுக்கு உரங்கள் மானிய விலையிலும், மலிவாகவும் நியாயமான விலையில் கிடைப்பது உறுதி செய்யப்படும். 
  • சர்வதேச சந்தையில் உரங்கள், அதற்கான மூலப்பொருட்களின் விலைகளில் ஏற்பட்டுள்ள ஏற்றத்தாழ்வுகள் கருத்தில் கொண்டு பாஸ்பேட், பொட்டாஷ் உரங்களுக்கான மானிய விகிதங்கள் சீரமைக்கப்படும்.
  • டிஏபி, நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற தாவர ஊட்டச்சத்துகளுக்கான உர வகைகள் உட்பட பாஸ்பேட், பொட்டாஷ் உரங்களுக்கான மானியங்கள் நடப்பு ரபி பருவத்திற்காக அங்கீகரிக்கப்பட்ட விகிதாச்சார அடிப்படையில் வழங்கப்படும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel