//
Type Here to Get Search Results !

10th NOVEMBER 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

TODAY TNPSC CURRENT AFFAIRS 2026 TNPSCSHOUTERS TAMIL & ENGLISH PDF

10th NOVEMBER 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

நீர்நிலைகளை சீரமைக்க ஏரி இணையதளத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்
  • தமிழகத்தில் உள்ள ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளைப் புனரமைக்கும் பணிகளில் தன்னார்வலர்கள் மற்றும் அரசுசாரா அமைப்புகளின் பங்களிப்பை அதிகரிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு புதிய முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளது.
  • இதற்காக நீர்வளத் துறை சார்பில் உருவாக்கப்பட்டுள்ள 'ஏரி' (ERI) என்ற புதிய இணையதளத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். 
  • இதன் மூலம் நீர்நிலைகளைச் சீரமைக்க விரும்பும் அரசுசாரா அமைப்புகள், பல்வேறு அரசுத் துறை அலுவலகங்களுக்குச் சென்று தடையின்மைச் சான்றிதழ் பெறுவதற்காகக் காத்திருக்க வேண்டிய அவசியம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த இணையதளத்தைத் தொடங்கி வைத்த முதலமைச்சர் விஜய், நீர்நிலைகளைப் புனரமைக்கும் பணிகளை மேற்கொள்ளத் தேர்வு செய்யப்பட்ட அரசுசாரா அமைப்புகளின் பிரதிநிதிகளுக்குத் தடையின்மைச் சான்றிதழ்களையும் வழங்கினார்.
அந்தமான் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவுகளின் மீன்வளத்துறை மேம்பாட்டுக்கு ரூ.393 கோடி நிதி ஒதுக்கீடு
  • இந்தியாவின் நீலப் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் அந்தமான் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவுகளில் மீன்வளத்துறையை நவீனமயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. 
  • நாட்டின் கடல்சார் வளங்களை முழுமையாகப் பயன்படுத்தி மீன் உற்பத்தி, கடல்பாசி வளர்ப்பு, திருக்கை மற்றும் சூரை மீன் உற்பத்தி உள்ளிட்ட நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசால் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 
  • இதன் ஒரு பகுதியாக பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு ரூ.218 கோடியும், லட்சத்தீவுகளுக்கு ரூ.175 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • இந்தத் தீவுப் பகுதிகள் நாட்டின் பிரத்யேகப் பொருளாதார மண்டலத்தில் பெரும் பகுதியை உள்ளடக்கியுள்ளன. மேலும், மீன்பிடித்தலுக்கான வாய்ப்புகளும் இங்கு அதிகம் உள்ளன.
  • பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், தீவுப் பகுதிகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்த பல்வேறு முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உள்ளூர் சந்தைகளுக்கும் ஏற்றுமதிக்கும் உயர்தர மீன் வகைகளை எளிதில் கொண்டு செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel