
5th OCTOBER 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்
- தமிழ் மொழியின் கலைச் சுடரைப் போற்றி வளர்ப்பதில், தமிழக அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் மிக முக்கியமான பங்களிப்பை வழங்கி வருகிறது.
- தமிழ் வளர்ச்சித் துறையின் நேரடி மேற்பார்வையில் செயல்பட்டு வரும் இந்த அமைப்பிற்கு, தவெக ஆட்சி அமைந்ததைத் தொடர்ந்து பிரபல நாட்டுப்புறக் கலைஞர் புஷ்பவனம் குப்புசாமி புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- சுவிஸ் கூட்டமைப்புத் தலைவர், இந்தியாவில் மேற்கொண்ட அரசுமுறைப் பயணத்தின் ஒரு பகுதியாக, இரு நாடுகளிடையே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
- இந்தியா - சுவிட்சர்லாந்து நாடுகளிடையே சமத்துவக் கொள்கைகளின் அடிப்படையில், புலம் பெயர்வு, பயணிகள் போக்குவரத்து சார்ந்த ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், தேசிய சட்டங்களுக்கு ஏற்ப, முறையற்ற புலம் பெயர்வு, மனிதவள சுரண்டல் போன்ற சட்ட விரோத செயல்களைத் தடுப்பதற்கும் புலம் பெயர்தல், பயணிகள் போக்குவரத்து சார்ந்த ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்ததம் வகை செய்கிறது.
- 5 ஆண்டுகள் வரை, ஒவ்வொரு வருகையின் போதும் 6 மாதங்கள் வரை தங்கும் வசதியுடன் கூடிய விசா வழங்குவது, புதுப்பிக்கக்கூடிய 1 ஆண்டு மாணவர் விசா வழங்குவதற்கான அனுமதிகளையும் வழங்குவதற்கும் இந்த ஒப்பந்தத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.
- தொழில்முறை, மொழித் திறன்களை மேம்படுத்திக்கொள்ளும் வகையில், பிற நாடுகளில் தற்காலிகப் பணியில் ஈடுபடும் இளம் தொழில்முறை நிபுணர்களின் பரிமாற்றத்தை முறைப்படுத்துவதை, இளம் தொழில்முறை நிபுணர்கள் பரிமாற்றம் குறித்த ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இவ்விரு நாடுகள் இடையே, ஒருங்கிணைந்த பொருளாதார விவகாரங்கள், கல்வி, ஆராய்ச்சித் துறை, சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சகங்களுடன், போக்குவரத்துத் தொழில்நுட்பங்கள், அதற்கான கட்டமைப்பு வசதிகள், உள்கட்டமைப்புத் துறைகளில் ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் வகையில், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
- இதன்படி, மின்சார வாகனங்கள், ரோப்வேகள் (கம்பிவடப் போக்குவரத்து), சுழற்சி பொருளாதாரம், சுரங்கப்பாதைகள், பிற போக்குவரத்துத் துறைகளில், தொழில்நுட்பங்கள், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதன் மூலம், நிலையான உள்கட்டமைப்பு மேம்பாட்டில், ஒத்துழைப்பை ஊக்குவிப்பதை இந்த ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை - சுவிஸ் தேசிய அறிவியல் அறக்கட்டளை ஆகியவற்றிற்கு இடையேயான ஒப்பந்தக் கடிதம் ஒன்றும் கையெழுத்தாகியுள்ளது.
- ஆய்வுசார் அறிவியல் ஒத்துழைப்பை மேம்படுத்துதல், எதிர்காலத்தில் ஒருங்கிணைந்த ஆராய்ச்சிப் பணிகளுக்கான ஒத்துழைப்புக்களை உருவாக்குதல், பரஸ்பரம் ஏற்றுக் கொள்ளப்பட்ட முன்னுரிமை சார்ந்தப் பகுதிகளில், நீண்டகால முயற்சிகளைத் தக்கவைக்கும் வகையில், ஒரு விரிவான கட்டமைப்பை நிறுவுதல் ஆகிய நடவடிக்கைகள் மூலம், இந்தியா - சுவிஸ் நாடுகளிடையேயான ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கு நீண்டகால ஒத்துழைப்பை ஊக்குவிப்பதை இந்த விருப்பக் கடிதம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை - சூரிச் பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழகம் இடையே, புத்தாக்கம், தொழில்நுட்பப் பரிமாற்றம், தொழில்முனைவு ஆகியவற்றில், ஒத்துழைப்புக்கான செயலாக்க ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் ஒன்றும் கையெழுத்தாகியுள்ளது.
- இந்த செயலாக்க ஏற்பாட்டின் மூலம், இருதரப்புத் தொழில்நுட்பப் பரிமாற்றம், கூட்டுப் பயிற்சிப் பட்டறைகள், திறன் மேம்பாடு, கட்டமைப்பு ஆகியவற்றின், தொடக்க நிலை புத்தொழில் நிறுவனங்களுக்கான இந்தோ-சுவிஸ் கல்வித்துறை-தொழில்துறை பயிற்சித் திட்டத்தைச் செயல்படுத்துவது, புத்தாக்கம், தொழில்நுட்பப் பரிமாற்றம், தொழில்முனைவு ஆகியவற்றில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இதனைத் தொடர்ந்து, மத்திய அறிவியல்,தொழில்நுட்ப அமைச்சகத்துடன் இணைந்து நடைபெறும், இந்தோ-சுவிஸ் ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கான முன்னோடி நிகழ்ச்சியின் தொடக்க அமர்வு விரைவில் நடத்தப்படும் என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டது.
- ஆராய்ச்சி, மேம்பாடு, புத்தாக்க நிதியத்தின் கீழ் ரூ.130 கோடி மதிப்பிலான உள்நாட்டு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய சிப் உற்பத்திக்கான ஒப்பந்தத்தில் மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறையின், தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் கையெழுத்திட்டுள்ளது.
- முக்கியதத்துவம் வாய்ந்த, வளர்ந்து வரும் பயன்பாடுகளுக்கான உள்நாட்டு செமிகண்டக்டர் திறன்களை மேம்படுத்தும் மத்திய அரசின் முயற்சிகளுக்கு வலு சேர்க்கும் வகையில், மத்திய தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம், பெங்களூருவைச் சேர்ந்த பிக்எந்தியன் செமிகண்டக்டர்ஸ் நிறுவனத்துடன் இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
- இதன்படி, ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புத்தாக்க நிதியத்தின் கீழ், ரூ.130 கோடி நிதி உதவி வழங்கப்படும். வீர்-ஏஐ என்று பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ.260 கோடியாகும். இது தொழில்நுட்பத் தயார்நிலையை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இந்த நிதி உதவி விருப்பத்தின் பேரில் பங்குத் தொகையாக மாற்றக்கூடிய கடன் நடைமுறை மூலம் வழங்கப்படும். பாதுகாப்பான, அறிவுசார், குறிப்பிட்ட பயன்பாட்டிற்கான செமிகண்டக்டர் தீர்வுகளுக்கான வளர்ந்து வரும் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், தொழில்நுட்பத் தளத்தில் தயாரிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
- வெளிநாடுகளில் உருவாக்கப்பட்ட செமிகண்டக்டர், தொழில்நுட்ப விநியோக நடைமுறைகள் மீதான சார்புநிலையைக் குறைக்கும் வகையில், கண்காணிப்புப் பயன்பாடுகளுக்கான, குறிப்பாக சிசிடிவி அமைப்புகளுக்கான, பாதுகாப்பான செயற்கை நுண்ணறிவு சிப்பை உருவாக்குவதை இத்திட்டம் மையமாகக் கொண்டுள்ளது.

