
31st OCTOBER 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
NVS-03 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது
- ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து GSLV-F18 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட 2,250 கிலோ எடை கொண்ட அடுத்த தலைமுறை வழிகாட்டு செயற்கைக்கோளான NVS-03, திட்டமிடப்பட்ட புவிநிலை பரிமாற்ற சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.
- NVS-03 என்ற இந்த செயற்கைக்கோள் அடுத்த தலைமுறை வழிகாட்டு செயற்கைக்கோள் அமைப்பின் மூன்றாவது செயற்கைக்கோள் ஆகும்.
- இது இந்திய பிராந்திய வழிகாட்டு செயற்கைக்கோள் அமைப்பு (IRNSS) அல்லது நேவிகேஷன் வித் இந்தியன் கான்ஸ்டலேஷன் (NavIC) மூலம் வழங்கப்படும் வழிகாட்டு சேவைகள் தடையின்றி தொடர்வதை உறுதி செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது.
- இந்த செயற்கைக்கோள் ஏற்கனவே உள்ள L5 மற்றும் S அலைவரிசை சமிக்ஞைகளுடன், L1 சமிக்ஞையையும் கொண்டுள்ளது. இது இந்திய நிலப்பரப்பு மற்றும் இந்திய எல்லைகளில் இரந்து சுமார் 1,500 கி.மீ. சுற்றளவு கொண்ட பிராந்தியம் வரை தனது சேவையை வழங்கும்.
- நேவிக் (NavIC) என்பது இந்தியாவின் சுதந்திரமான வழிகாட்டு செயற்கைக்கோள் அமைப்பாகும். இது இந்தியாவிலும், இந்திய நிலப்பரப்பில் இருந்து சுமார் 1,500 கி.மீ. தொலைவு வரையிலான பிராந்தியத்திலும் உள்ள பயனர்களுக்கு துல்லியமான இருப்பிடம், வழிகாட்டுதல் மற்றும் நேரத்தை கண்டறியும் (PNT - Position, Navigation, and Timing) சேவைகளை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது.

