
2nd OCTOBER 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
வெற்றி பயணம் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்
- தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், பெண்களுக்கான இலவச பேருந்து பயண திட்டத்தின் விரிவாக்கமான 'வெற்றி பயணம்' திட்டத்தை முறைப்படி தொடங்கி வைத்துள்ளார்.
- அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் வசதியை மேலும் மேம்படுத்தும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் தொடக்க விழாவின் போது, முதலமைச்சர் விஜய் நேரில் பேருந்தில் ஏறி அதிரடி பயணம் மேற்கொண்டார்.
- அப்போது, பேருந்தில் பயணித்த பெண் பயணிகளுக்கு அவரே நடத்துநராக மாறி, மின்னணு பயணச்சீட்டு வழங்கும் கருவி மூலம் கட்டணமில்லா பயணச்சீட்டுகளை வழங்கினார்.
- இந்த திட்டத்தின் மூலம் மாநகரம், நகரங்களில் சாதாரணப் பேருந்துகள் மட்டுமின்றி மாநகரம், நகர்ப்பகுதிகளில் இயங்கும் எக்ஸ்பிரஸ், எல்எஸ்எஸ், டீலக்ஸ் அரசுப் பேருந்துகளிலும், மகளிர் இலவசமாகப் பயணிக்கலாம்.
- மேலும் கூடுதலாக, மாவட்டங்களுக்கிடையே பயணம் மேற்கொள்ள ஏதுவாக புறநகர் மற்றும் மலைப்பகுதிகளில், சாதாரணக் கட்டணப் பேருந்துகளிலும் இத்திட்டம் பொருந்தும்.
- 7 போக்குவரத்து கழகங்கள் மூலமாக இயக்கப்பட உள்ள 12,692 பேருந்துகளில் தினசரி 84.32 லட்சம் பெண்கள் மற்றும் திருநங்கைகள் பயன் பெறுவார்கள்.
- ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், இந்தியா இதுவரை மொத்தம் 76 பதக்கங்களை (16 தங்கம், 25 வெள்ளி, 35 வெண்கலம்) வென்று, தற்போது 5-வது இடத்தில் உள்ளது.
- ஹாக்கி - மகளிர் ஹாக்கிப் போட்டியில் சீனாவை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி இந்தியா தங்கம் வென்றது.
- குத்துச்சண்டை - ஆடவர் 80 கிலோ எடைப்பிரிவில் அங்குஷ் தங்கம் வென்றார்.
- மல்யுத்தம் - 65 கிலோ எடைப்பிரிவில் சுஜீத் தங்கம் வென்றார்.
- குத்துச்சண்டை - மகளிர் 65 கிலோ எடைப்பிரிவில் பர்வீன் தங்கம் வென்றார்.
- செபக்தக்ரோ (Sepaktakraw) - ஆடவர் குவாட்ரண்ட் (quadrant) அரையிறுதியில் ஜப்பானிடம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இந்தியா வெண்கலம் வென்றது.
- வில்வித்தை - ஆடவர் ரிகர்வ் (recurve) அணிகள் பிரிவில் இந்தியா வெள்ளி வென்றது.
- குத்துச்சண்டை - மகளிர் 75 கிலோ எடைப்பிரிவில் லவ்லினா போர்கோஹைன் தங்கம் வென்றார்.
- வில்வித்தை - மகளிர் ரிகர்வ் அணிகள் பிரிவில் கும்கும் மோஹோத், அங்கிதா பகத் மற்றும் கீர்த்தி ஆகியோர் தங்கம் வென்றனர்.
- வில்வித்தை - கலப்பு ரிகர்வ் அணிகள் பிரிவில் கும்கும் மோஹோத் மற்றும் தீரஜ் பொம்மதேவரா ஆகியோர் வெள்ளி வென்றனர்.
- பாய்மரப் படகோட்டம் (Sailing) - மகளிர் டிங்கி (dinghy) பிரிவில் நேத்ரா குமணண் வெண்கலம் வென்றார்.

