//
Type Here to Get Search Results !

27th OCTOBER 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

TODAY TNPSC CURRENT AFFAIRS 2026 TNPSCSHOUTERS TAMIL & ENGLISH PDF

27th OCTOBER 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

பிரதமர் திரு நரேந்திர மோடி, வளர்ந்து வரும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க மாநாடு 2026-ஐத் தொடங்கி வைத்தார்
  • பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் இன்று புது தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில், வளர்ந்து வரும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க மாநாடு 2026-ஐத் தொடங்கி வைத்தார். 
  • மாநாட்டில் உரையாற்றிய பிரதமர், இன்று காலை ஸ்டார்ட்அப் நிறுவனர்களுடன் நடத்திய உற்சாகமான கலந்துரையாடலைத் தொடர்ந்து தனது உற்சாகத்தைப் பகிர்ந்து கொண்டார். 
  • நாட்டின் இளைஞர்களின் பரந்த தொலைநோக்குப் பார்வையையும், துணிச்சலான உறுதியையும் அவர் பாராட்டினார். "இந்திய இளைஞர்கள் சிந்திக்கும் விதமும், அவர்கள் முன்னோக்கிச் செல்லும் தன்னம்பிக்கையும் ஊக்கமளிக்கிறது," என்று திரு மோடி குறிப்பிட்டார்.
இந்தியா – இந்தோனேசியா கூட்டுச் சிறப்புப் படைகள் பயிற்சியான கருடா சக்தி 2026
  • இந்தியா – இந்தோனேசியா இடையேயான கூட்டுச் சிறப்புப் படைகள் பயிற்சியான கருடா சக்தியின் 11-வது பதிப்பு இந்தோனேசியாவின் பேன்யூவாங்கியில் தொடங்கியது. 
  • இப்பயிற்சி 2026 அக்டோபர் 27-ம் தேதி முதல் நவம்பர் 6-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தியக் குழுவில் பாராசூட் படைப் பிரிவின் (சிறப்புப் படைகள்) வீரர்களும் இந்தோனேசியக் குழுவில் இந்தோனேசியச் சிறப்புப் படை வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.
  • இரு நாடுகளின் சிறப்புப் படைகளுக்கிடையே பரஸ்பர புரிந்துணர்வு, ஒத்துழைப்பு, ஒருங்கிணைந்த செயல்பாட்டுத் திறன் ஆகியவற்றை வலுப்படுத்துவதே இப்பயிற்சியின் நோக்கமாகும். 
  • இப்பயிற்சியில் தடை தாண்டுதல், போர் களத்தில் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபடுதல், மலையேறுதல், வான்வழி தாக்குதல் பயிற்சி, போர் பயிற்சிகளை வலுப்படுத்துதல் உட்பட வனம் சார்ந்த சூழல்களில் சிறப்பு நடவடிக்கைகளுக்கான உத்திகள், நுட்பங்கள், செயல்முறைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படுகிறது. 
  • அத்துடன் ஆயுதங்கள், உபகரணங்கள், செயல் நடவடிக்கைகள் தொடர்பான நிபுணத்துவம், தகவல் பரிமாற்றம் ஆகியவையும் இப்பயிற்சியில் இடம்பெறும்.
  • இக்கூட்டுப் பயிற்சியானது இரு குழுக்களின் ஒருங்கிணைப்பு போன்றவற்றின்  மதிப்பீட்டு பயிற்சியுடன் நிறைவடையும். இப்பயிற்சி இந்தியா – இந்தோனேசியா இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு, இருதரப்பு உறவுகள் ஆகியவற்றை மேலும் வலுப்படுத்தும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel