
26th OCTOBER 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
அர்னாப் புயல் உருவானது
- வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், திங்கள்கிழமை (அக்டோபர் 26) காலை 'அர்னாப்' (Arnab) புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- இந்த புயல் அக்டோபர் 28-ம் தேதி முற்பகலில் ஆந்திரப் பிரதேசக் கடற்கரையில் பாபட்லா மற்றும் விசாகப்பட்டினம் இடையே அதிதீவிரப் புயலாகக் கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அப்போது மணிக்கு 115 முதல் 125 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்; காற்றின் வேகம் மணிக்கு 140 கி.மீ. வரை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.
- தென் அமெரிக்க நாடான பிரேசிலில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், தற்போதைய ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா (luiz inacio lula da silva) மற்றும் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சோனாரோவின் மகன் பிளாவியோ போல்சோனாரோவுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
- முதல் சுற்றில், வலதுசாரி கட்சியான லிபரல் கட்சியின் பிளாவியோ போல்சோனாரோ 47.03 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார். இடதுசாரி கட்சியான தொழிலாளர் கட்சியின் லூயிஸ் இனாசியோ லுலா டா 45.16 வாக்குகள் பெற்றிருந்தார்.
- இறுதிசுற்றான 2வது சுற்றில், லூயிஸ் இனாசியோ லுலா டா 51.79 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். பிளாவியோ போல்சோனாரோ 48.21 வாக்குகள் பெற்றிருந்தார்.
- இதன் மூலம், இனாசியோ லுலா டா சில்வா 4வது முறையாக பிரேசிலின் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். முன்னதாக 2002, 2006, 2022 ஜனாதிபதி தேர்தல்களில் வெற்றி பெற்று பிரேசிலின் ஜனாதிபதியாக பதவி வகித்திருந்தார்.

