
24th OCTOBER 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
தில்லியில் காற்று மாசுபாடு பகுப்பாய்வு மையம் - மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் திறந்து வைத்தார்
- அறிவியல், தொழில்நுட்பம், புவி அறிவியல் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், இன்று (24.10.2026) தில்லி தேசிய தலைநகர் பிராந்தியத்திற்கான உலகின் முதல் காற்று மாசுபாடு பகுப்பாய்வு மையத்தைத் திறந்து வைத்தார்.
- ஒருங்கிணைந்த வளிமண்டல வேதியியல், ஏரோசல் நச்சுத்தன்மை பகுப்பாய்வு ஆய்வகம் என்று அழைக்கப்படும் இந்த மையம், காற்று மாசுபாடு குறித்து உடனடி தகவல்களை அறியும் வசதியைக் கொண்டுள்ளது.
- ஐஐடிஎம் நிறுவனத்தின் தில்லி கிளையில், புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் டி. சீனிவாச குமார், ஐஐடிஎம் இயக்குநர் டாக்டர் ஏ. சூர்யசந்திர ராவ், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைமை இயக்குநர் டாக்டர் மகாபாத்ரா ஆகியோர் முன்னிலையில் இந்தத் திறப்பு விழா நடைபெற்றது.

