
21st OCTOBER 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
மழை நீர் சேமிப்பு விழிப்புணர்வு விழாவை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்
- தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமைடைந்து வரும் நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு தொடக்க விழாவை முதலமைச்சர் விஜய் தொடங்கிவைத்தார்.
- இதனைத்தொடர்ந்து மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு குறித்த 'துளி' இலச்சினையையும் (logo) அறிமுகம் செய்து வைத்தார்.
- இதனைத்தொடர்ந்து மழை நீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு வீடியோவை முதலமைச்சர் விஜய், அமைச்சர்கள் ராஜ்மோகன், ஆதவ் அர்ஜுணா உள்ளிட்டோருடன் இணைந்து வெளியிட்டார்.
- அப்போது 'மழை நீர் சேமிப்பு முக்கியம் மக்களே' என்ற விழிப்புணர்வு வீடியோ பிரம்மாணடமான LED திரையில் ஒளிபரப்பப்பட்டது.
- ஜப்பானின் நகோயாவில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் இந்திய தடகள வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
- இந்தியா இதுவரை 14 தங்கம், 21 வெள்ளிப் பதக்கங்களையும், 27 வெண்கலப் பதக்கங்களையும் வென்றுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்தப் பதக்கப் பட்டியலில் இந்தியா 5 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
- இந்தியாவின் சிம்ரன், உயரம் தாண்டுதல் வீரர் பிரவீன் குமார், குண்டு எறிதல் வீரர் சச்சின் கிலாரி ஆகியோர் தங்களது பிரிவுகளில் புதிய போட்டி சாதனைகளைப் படைத்தனர்.
- மகளிர் 100 மீட்டர் டி12 பிரிவில் சிம்ரன், ஆடவர் உயரம் தாண்டுதல் டி44/64 பிரிவில் பிரவீன் குமார், ஆடவர் குண்டு எறிதல் எஃப்46 பிரிவில் சச்சின் கிலாரி ஆகியோர் தங்கப் பதக்கங்களை வென்றனர். இவர்களுடன் ஆடவர் 100 மீட்டர் டி47 பிரிவில் திலீப் கைவிட், ஆடவர் குண்டு எறிதல் எஃப்53 பிரிவில் ஆயுஷ் வர்மா ஆகியோரும் தங்கம் வென்றனர்.
- பார்வைக் குறைபாடு கொண்ட ஓட்டப்பந்தய வீராங்கனை சிம்ரன் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனைகளில் ஒருவராகத் திகழ்கிறார். மகளிர் 200 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்ற அவர், தற்போது 100 மீட்டர் ஓட்டத்திலும் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார்.
- வில்வித்தையில் சாதித்து வரும் ஷீத்தல் தேவி, மகளிர் இரட்டையர் பிரிவில் பாயல் நாக் உடன் இணைந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இறுதிப் போட்டியில் சீனாவிடம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அவர்களுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
- நீச்சல் போட்டியில் பார்வைக் குறைபாடு கொண்ட ரவி கார்த்திக் புடிகினா, ஆடவர் 100 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் எஸ்13 பிரிவில் தனது இரண்டாவது வெள்ளிப் பதக்கத்தை வென்றார். ஹிமான்ஷு நந்தலும் ஆடவர் பிரஸ்ட் ஸ்ட்ரோக் எஸ்பி13 பிரிவில் வெண்கலப் பதக்கத்தை வென்றார். இவரும் பார்வைக் குறைபாடு கொண்டவர்.
- போலியோ பாதிப்புக்குள்ளான பளுதூக்கும் வீராங்கனை கஸ்தூரி ராஜாமணி, மகளிர் 67 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

