
16th OCTOBER 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
பெரியார் அறிவுலகத்தை முதல்வர் ஜோசப் விஜய் திறந்து வைத்தார்
- கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் 1.98 லட்சம் சதரடியில் 7 தளங்கள் கொண்ட பெரியார் அறிவுலகம் மற்றும் அறிவியல் மையத்தை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார். பின்னர் முதல் வாசகராக பதிவேட்டில் கையெழுத்திட்டார்.
- பின்னர் அறிவுலகத்தில் உள்ள வரவேற்பரை, அறிவியல் மையம், குழந்தைகள் நூலகம், டிஜிட்டல் நூலகம் உள்ளிட்ட வற்றை பார்வையிட்டார்.
- இதனைத்தொடர்ந்து பெரியார் அறிவுலக வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் விஜய் ரூ.408 கோடி மதிப்பீட்டில் 89 முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார். மேலும் ரூ.32.32 கோடி மதிப்பிலான 144 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
- பின்னர் ரூ 34.72 கோடியில் 9,343 பயணாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் மாற்றுத்திறநாளி பயணாளிகளுக்கு செயற்கை கால் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அவர்களின் இருக்கைக்கே சென்று வழங்கினார்.
- கர்நாடகத்தின் புதிய கவர்னராக சுதா யாதவை கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதியான விபு பக்ரு இன்று பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
- கர்நாடக மாநில கவர்னராக தாவர்சந்த் கெலாட் இருந்த நிலையில், தாவர்சந்த் கெலாட் மாற்றப்பட்டு. அவருக்கு பதிலாக புதிய கவர்னராக சுதா யாதவை கடந்த 12-ந் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு நியமித்து உத்தரவிட்டார்.
- சுதா யாதவ் அரியானா மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். அவரது கணவர் சுக்பீர் சிங் யாதவ் எல்லை பாதுகாப்பு படை யில் கமாண்டராக பணியாற்றி, கார்கில் போரில் மரணம் அடைந்திருந்தார்.

