
15th OCTOBER 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
தமிழ்நாடு குறைக்கடத்தி சூழலமைப்புத் திட்டத்தை முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் வெளியிட்டார்
- தமிழ்நாட்டை இந்தியாவின் முன்னணி குறைக்கடத்தி மற்றும் மேம்பட்ட மின்னணு உற்பத்தி மையமாக உருவாக்கும் வகையிலும், இத்துறையில் உலகளாவிய முதலீடுகளை அதிகளவில் ஈர்க்கும் வகையிலும் வகுக்கப்பட்டுள்ள தமிழ்நாடு குறைக்கடத்தி சூழலமைப்புத் திட்டத்தை முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.
- தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் புதிய கொள்கை ஆவணம் வெளியிடப்பட்டது.
- முன்னதாக, காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலத்தில் நவீன உள்கட்டமைப்புடன் கூடிய குறைக்கடத்தி மற்றும் மின்னணுவியல் பூங்கா அமைக்கப்படும் எனச் சட்டமன்றப் பேரவை விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் அறிவித்திருந்தார்.
- மேலும், நடப்பு நிதியாண்டிற்கான தொழில்துறை மானியக் கோரிக்கையின் போது, ஒன்றிய அரசின் திட்டத்துடன் இணைந்து நிறுவனங்களின் தேவைகளுக்கேற்ப மாநில அரசு பிரத்யேக ஊக்கத்தொகைத் திட்டத்தை வழங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
- அதன்படி, சிப் வடிவமைப்பு, இயந்திரங்கள் மற்றும் மூலப்பொருட்கள் தயாரிப்பு, வேஃபர் ஃபேப்ரிகேஷன் (Fabs), ATMP/OSAT, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு உள்ளிட்ட முழுமையான குறைக்கடத்தி மதிப்புச் சங்கிலியை பலப்படுத்தும் நோக்கில் இத்திட்டம் இரண்டு பிரிவுகளாகச் செயல்படுத்தப்பட உள்ளது.
- ஒன்றிய அரசின் 'செமிகான் இந்தியா 2.0' திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்படும் முதலீட்டுத் திட்டங்களுக்கு, ஒன்றிய அரசின் நிதி உதவியுடன் கூடுதலாகத் தமிழ்நாடு அரசும் சிறப்பு ஊக்கத்தொகைகளை வழங்கும்.
- அதேபோல், ஒன்றிய அரசின் திட்டத்தின் கீழ் இடம்பெறாத போதிலும், தமிழ்நாட்டின் தொழில்துறைக்கு இன்றியமையாததாகக் கருதப்படும் தகுதியான புதிய திட்டங்களுக்கும் தமிழ்நாடு அரசு தேவைக்கேற்பத் தனித்துவமான ஆதரவையும் சலுகைகளையும் வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்திய விமானப்படைக்கான பிரத்யேக தகவல் தொடர்பு செயற்கைக்கோளான ஜிசாட்-7சி, இந்திய கடற்படைக்கான வருணாஸ்திரா கனரக டார்பிடோக்களை கொள்முதல் செய்வதற்காக, ரூ.4,106 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களில் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது.
- ஜிசாட்-7சி செயற்கைக்கோளுக்கான ரூ.2,563 கோடி மதிப்பிலான ஒப்பந்தம், பெங்களூருவைச் சேர்ந்த நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனத்துடன் கையெழுத்தானது.
- உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டு, தயாரிக்கப்பட்ட இந்த செயற்கைக்கோள், இந்திய விமானப்படையின் மீள்திறன் கொண்ட, தடையற்ற தகவல் தொடர்பு திறன்களை மேம்படுத்தி, அதன் மூலம் செயல்பாட்டுத் திறனை வலுப்படுத்த உதவிடும்.
- வருணாஸ்திராவுக்கான ரூ.1,543 கோடி மதிப்பிலான ஒப்பந்தம், ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்துடன் கையெழுத்தானது.
- வருணாஸ்திரா என்பது கடற்படை அறிவியல், தொழில்நுட்ப ஆய்வகத்தால் உருவாக்கப்பட்ட, கப்பலில் இருந்து ஏவப்படும் ஒரு உள்நாட்டு நீர்மூழ்கி எதிர்ப்பு டார்பிடோ வகையைச் சேர்ந்ததாகும்.
- மேம்பட்டத் திறன்களைக் கொண்டுள்ள இந்தக் கப்பல், நீண்ட தொலைவில் உள்ள எதிரி நீர்மூழ்கிக் கப்பல்களைத் தாக்கும் திறன் கொண்டது. இதன்மூலம், இந்தியக் கடற்படையின் நீர்மூழ்கி எதிர்ப்புப் போர்த் திறனை இது மேம்படுத்துகிறது.

