
14th OCTOBER 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
ரூ. 3108 கோடி மதிப்பிலான சென்னையின் புதிய குடிநீர் திட்டத்திற்கு முதலமைச்சர் விஜய் அடிக்கல் நாட்டினார்
- சென்னையின் குடிநீர் விநியோகக் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.3,108.55 கோடியில் செயல்படுத்தப்படவுள்ள பிரதான சுற்றுக்குழாய் திட்டத்திற்கு முதலமைச்சர் விஜய் அடிக்கல் நாட்டினார்.
- சென்னை பெருநகரப் பகுதிகளில் சுமார் 85.7 லட்சம் மக்களுக்கு 84 குடிநீர் விநியோக அமைப்புகள் மூலம் நாளொன்றுக்கு 1,200 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
- தற்போது 5 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் 3 கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்கள் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது.
- நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட நான்காவது கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் கட்டுமானப் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
- தற்போதைய குடிநீர் விநியோகக் கட்டமைப்பில், ஒரு நீராதாரத்தில் பற்றாக்குறை ஏற்படும்போது மற்றொரு நீராதாரத்திலிருந்து உபரி நீரைத் தேவையான பகுதிகளுக்கு மாற்றுவதில் சிக்கல் நிலவுகிறது.
- இதனைத் தீர்க்கும் வகையில், சென்னையைச் சுற்றி 98 கி.மீ. நீளத்துக்கு பிரதான சுற்றுக்குழாய் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
- செப்டம்பர் மாதத்திற்கான மொத்த விற்பனை விலை குறியீட்டின் (அடிப்படை ஆண்டு 2022-23) தற்காலிக மதிப்பீடுகள் வெளியிடப்பட்டுள்ளன.
- இதன்படி, ஆகஸ்ட் 2026-ல், 9.92 சதவீதமாக இருந்த அகில இந்திய மொத்த விற்பனை விலை குறியீட்டின் பணவீக்க விகிதம், செப்டம்பர் 2026-ல் வருடாந்திர அடிப்படையில் 11.39 சதவீதமாக உள்ளது.
- செப்டம்பர் 2026-ல் அனைத்துப் பொருட்களுக்கான குறியீடு 112.5 ஆக உள்ளது. இது ஆகஸ்ட் 2026-ல் 110.8 ஆக இருந்தது.
- முதன்மைப் பொருட்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள், மின்சாரம், உற்பத்திப் பொருட்கள் ஆகியவற்றிற்கான வருடாந்திர பணவீக்க விகிதங்கள் செப்டம்பர் 2026-ல் முறையே 8.67%, 25.85% மற்றும் 9.76% ஆக உள்ளன. இவை ஆகஸ்ட் 2026-ல் முறையே 7.76%, 22.93% மற்றும் 8.37% ஆக இருந்தன.
- செப்டம்பர் 2026-ல், எரிபொருள், மின்சாரம், உற்பத்திப் பொருட்கள் ஆகியவற்றிற்கான குறியீடுகள் முறையே 120.3, 110.5 மற்றும் 110.2 ஆக உள்ளன. இவை ஆகஸ்ட் 2026-ல் முறையே 118.1, 108.3 மற்றும் 108.8 ஆக இருந்தன.
- பல்வேறு பிரிவுகளில், கனிம எண்ணெய்கள் (பெட்ரோலியப் பொருட்கள் உட்பட), உணவுப் பொருட்கள், கச்சா பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, நிலக்கரி, லிக்னைட் எனப்படும் பழுப்பு நிலக்கரி, அடிப்படை உலோகங்களின் உற்பத்தி, ரசாயனங்கள், ரசாயனப் பொருட்களின் உற்பத்தி, ஜவுளி உற்பத்தி, ரப்பர், பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, ஆகியவை இதில் அடங்கும். செப்டம்பர் 2026-ல், மொத்த விலை குறியீட்டு பணவீக்க விகித உயர்வுக்கு மின்சார உபகரணங்கள் முக்கிய காரணியாக அமைந்தன.
- பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் குழு, ஊரக மேம்பாட்டுத் துறையின் முன்மொழிவை ஏற்று, 2026-27 முதல் 2030-31 வரையிலான ஐந்து ஆண்டுகளுக்கு மொத்தம் ரூ 53,428 கோடி மதிப்பீட்டில் தேசிய சமூக உதவித் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது.
- மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், 0 முதல் 79 வயது வரையிலானவர்களுக்கு, ரூ 375-ம், 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு ரூ 625-ம் உதவித் தொகையாக வழங்கப்படும். உதவித் தொகை விகிதத்தை அதிகரிப்பதுடன், பல்வேறு மாற்றங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
- இத்திட்டத்தின் கீழ், குறிப்பிடத்தக்க இயலாமை என்பதற்கான தகுதி வரம்பு, தற்போதுள்ள 80 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாகக் குறைக்கப்படும்.
- இயலாமைக்கான ஓய்வூதியத்தைப் பெறுவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு பூஜ்யம் (அதாவது பிறந்தது முதல்) என்று நிர்ணயிக்கப்படும்.
- முதியோர், விதவைகளுக்கான ஓய்வூதியத் திட்டங்கள், குடும்ப நலத் திட்டம் ஆகியவை தற்போதுள்ள நிலையிலேயே தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
- இதன் மூலம், நாடு முழுவதும் உள்ள 36 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த மொத்தம் 3.20 கோடி பயனாளிகள் பயனடைவர்.
- மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், தகுதி வரம்புகள், பயனாளிகளின் எண்ணிக்கை, உதவித் தொகை விகிதங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்த வழிகாட்டுதல்கள் மூன்று மாதங்களுக்குள் வெளியிடப்பட்டு செயல்படுத்தப்படும்.
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் குழு, ரயில்வே ஊழியர்களின் சிறப்பான செயல்பாட்டை அங்கீகரிக்கும் வகையில், 11,40,770 ஊழியர்களுக்கு ரூ 2,009.61 கோடி மதிப்பிலான 78 நாட்களுக்கான உற்பத்தித் திறன் சார்ந்த கூடிய போனஸ் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
- தகுதியுள்ள ரயில்வே ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் துர்கா பூஜை / தசரா விடுமுறைக்கு முன்னதாகவே இந்த போனஸ் தொகை வழங்கப்படுகிறது.
- இந்த ஆண்டும், 11.40 லட்சம் கெஸட்டட் அங்கீகாரம் அல்லாத ரயில்வே ஊழியர்களுக்கு, 78 நாட்களுக்கான ஊதியத்திற்கு இணையான போனஸ் தொகை வழங்கப்படுகிறது.
- ரயில்வே துறையின் செயல்பாட்டை மேம்படுத்தும் வகையில் பணியாற்ற ஊழியர்களை ஊக்குவிப்பதற்கான உந்துசக்தியாக இந்தப் போனஸ் வழங்கப்படுகிறது. தகுதியுள்ள ஒரு ரயில்வே ஊழியருக்கு, 78 நாட்களுக்கு வழங்கப்படும் அதிகபட்ச போனஸ் தொகை ரூ.17,951 ஆகும்.
- 2025-26-ம் ஆண்டில், ரயில்வேயின் செயல்பாடு மிகச் சிறப்பாக இருந்தது. ரயில்வே நிர்வாகம் சாதனை அளவாக, 1670 மில்லியன் டன் சரக்குகள் மற்றும் 7.41 பில்லியன் பயணிகளை கையாண்டுள்ளது.

