
16th SEPTEMBER 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
ஐரோப்பிய ஒன்றியத்தின் முதல் இணை உறுப்பினராக கனடாவிற்கு அழைப்பு
- ஐரோப்பிய ஒன்றியம் (EU) தனது 27 உறுப்பினர் நாடுகளுக்குள், கனடாவை முதல் இணை உறுப்பினராக (Associate Member) அழைக்கத் தீர்மானித்துள்ளது.
- இந்த அறிவிப்பை ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர்லெயன், பிரான்ஸ் ஸ்ட்ராஸ்பர்க் நகரில் நடைபெற்ற 'State of the Union' உரையில் வெளியிட்டார்.
- கனடா பிரதமர் மார்க் கார்னி, இந்த உரையில் கலந்து கொண்டார். அவர், கனடா முழுமையான உறுப்பினராக விரும்பவில்லை என்றாலும், பாதுகாப்பு மற்றும் பொருளாதார கூட்டாண்மை குறித்து தனித்துவமான ஒப்பந்தத்தை விரும்புவதாக தெரிவித்தார்.
- பணியாளர் வருங்கால வைப்பு நிதி (PF) திட்டத்தில் கட்டாயமாக சேர்வதற்கான மாதாந்திர அடிப்படை சம்பள வரம்பை தற்போதைய 15,000 ரூபாயில் இருந்து 25,000 ரூபாயாக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- தற்போதைய விதிகளின்படி, மாதம் 15 ஆயிரம் ரூபாய் வரை அடிப்படை சம்பளம் பெறுவோர் பணியாளர் வருங்கால வைப்பு நிதி மற்றும் பணியாளர் ஓய்வூதியத் திட்டத்திலும் கட்டாயமாக சேர வேண்டும்.
- இதற்கு மேல் சம்பளம் பெறுவோர் விருப்பத்தின் பேரில் சேரலாம். 20 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரியும் நிறுவனங்களில் இந்த விதி கட்டாயமாக அமல்படுத்தப்படுகிறது.
- தற்போது 15,000 ரூபாய் சம்பள வரம்பின் அடிப்படையில், பணியாளர் 12 சதவீதமாக 1,800 ரூபாய் பங்களிப்பு செய்கிறார். நிறுவனமும் அதே அளவு பங்களிப்பை வழங்குகிறது. இதில், 3.67 சதவீதம் பி.எப். கணக்கிலும், 8.33 சதவீதம் பணியாளர் ஓய்வூதியத் திட்டத்திலும் செலுத்தப்படுகிறது.

