
9th AUGUST 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
தமிழ்நாடு சட்ட ஆணையத் தலைவராக நீதியரசர் டி.கிருஷ்ணகுமார் நியமனம்
- தமிழ்நாடு சட்ட ஆணையத்தின் பதவி காலம் கடந்த ஜூன் மாதம் 18 ஆம் தேதி நிறைவடைந்தது. இதனையடுத்து தற்போது சட்ட ஆணையம் மறுசீரமைக்கப்பட்டு தலைவர் மற்றும் முழுநேர, பகுதி நேர உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
- மாநில சட்ட ஆணையத்தின் தலைவராக மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி டி. கிருஷ்ணகுமார், நியமிக்கப்பட்டுள்ளார்.
- இதன் முழு நேர உறுப்பினர்களாக நீதிபதி ஆர்எம்டி டீக்கா ராமன், சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி, டி.கே.ராமச்சந்திரன் ஐஏஎஸ், முன்னாள் கூடுதல் தலைமைச் செயலாளர், தமிழக அரசு, ஏ. அருணகிரி, சட்டத்துறை முன்னாள் செயலாளர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
- இந்த ஆணையத்தின் பகுதி நேர உறுப்பினர்களாக பி. மோகன்தாஸ், முன்னாள் மாவட்ட நீதிபதி, ஆர். கோவிந்தராஜன், முன்னாள் மாவட்ட நீதிபதி, சட்டத்துறை செயலாளர் நிலையில் உள்ள அதிகாரி - முழு நேர உறுப்பினர் செயலாளர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

