
7th AUGUST 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவராக பெலிக்ஸ் ஜெரால்டு நியமனம்
- தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் புதிய தலைவராக மூத்த பத்திரிகையாளர் பெலிக்ஸ் ஜெரால்டு நியமிக்கப்பட்டுள்ளார்.
- இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை அரசாணையாகத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இந்த பொறுப்பில் அவர் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குப் பதவி வகிப்பார் என்று அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் (TAMCO) புதிய தலைவராக ஏ.பி.தமீம் அன்சாரி அவர்கள் தமிழக அரசின் அரசாணையின்படி அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- சிறுபான்மையின மக்களின் நலன்களைப் பாதுகாப்பதிலும் அவர்களின் பொருளாதார நிலையை உயர்த்தடுவதிலும் இந்த மேம்பாட்டுக் கழகம் மிக முக்கியப் பங்காற்றி வருவது குறிப்பிடத்தக்கது ஆகும்.
- புதிய நீதிபதிகள் நியமனம் தொடர்பான பட்டியலை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான கொலிஜியம் உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பியது.
- அந்த பட்டியலை உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிசீலித்து ஒன்றிய அரசுக்கு அனுப்பியது. அந்த பட்டியலை ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.இதையடுத்து புதிய நீதிபதிகள் நியமனம் தொடர்பான உத்தரவு ஒன்றிய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டது.
- புதிய நீதிபதிகளாக வழக்கறிஞர்கள் கிருஷ்ணசுவாமி கோவிந்தராஜன், ரஜ்னிஷ் பதியில், நடராஜன் ரமேஷ், ஜி.கே.முத்துக்குமார், ராமகிருஷ்ணன் ராஜேஷ் விவேகானந்தன், சங்கரநாராயணன் ரவிகுமார், நாகராஜன் திலீப் குமார், எல்லப்பன் மனோகரன் ஆகிய 8 பேரும், மாவட்ட நீதிபதிகளான டாக்டர் பி.முருகன், மதி எம்.டி.சுமதி, சண்முகம் கார்த்திகேயன், பாலுச்சாமி முருகேசன், என்.குணசேகரன், எஸ்.அல்லி, திருமகள் சந்திரசேகர் ஆகிய 7 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- இவர்களின் பதவிக்காலம் 2 ஆண்டுகள். அதன்பிறகு நிரந்தரம் செய்யப்படுவார்கள். இதையடுத்து, உயர் நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. காலியிடங்கள் 9 ஆக குறைந்துள்ளது.
- மேற்கு ஆசியாவில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் பாகிஸ்தான், சவுதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன.
- சவுதி அரேபியாவின் மெக்காவில் உள்ள அல்-சஃபா அரண்மனையில் கூட்டுப்பாதுகாப்புக்கான மெக்கா அல் -முகார்மா உச்சிமாநாடு நடைபெற்றது.
- இந்த கூட்டத்தில் பாகிஸ்தான், சவுதி மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது, பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப், சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் ஆகியோர் கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
- இந்த கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தின்படி இந்த மூன்று நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டின் மீதான தாக்குதலானது அவை மற்ற இரு நாடுகள் மீதான தாக்குதலாகவே கருதப்படும்.
- இந்த ஒப்பந்தம் எந்தவொரு ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு எதிராகவும் கூட்டுத்தடுப்பு ஆற்றலை வலுப்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.
- சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சி, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மேம்பாட்டு திருத்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தார்.
- சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களிடம் இருந்து பொருட்கள் அல்லது சேவைகளைப் பெறுவோர், அதற்கான பணத்தை செலுத்துவதில் ஏற்படும் தாமதங்கள் மற்றும் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் நோக்கில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
- குறிப்பாக, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களிடம் இருந்து பொருட்கள் அல்லது சேவையைப் பெறும் மத்திய பொதுத்துறை நிறுவனங்கள், அதற்கான கட்டணங்களை 'வர்த்தக வரவுத் தொகை தள்ளுபடி அமைப்பு' (Trade Receivables Discounting System - TReDS) மூலமாகவே செலுத்த வேண்டும் என்று இந்தச் சட்டம் வலியுறுத்துகிறது.
- மேலும், 'இரு தரப்புக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டால் மேற்கொள்ளப்படும் சமரச முயற்சி தோல்வி அடைந்தால், அந்த முயற்சி முடிவுக்கு வந்த தேதியில் இருந்து 30 நாட்களுக்குள் நடுவர் மன்ற தீர்வுக்கான நடவடிக்கையை தொடங்க வேண்டும்.
- டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சேவைகளை வழங்கும் வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் யுபிஐ (UPI) பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் வசூலிக்க அனுமதி அளிக்கும் புதிய சட்டத்திருத்த மசோதா விவாதம் எதுவும் இன்றி குரல் வாக்கெடுப்பு மூலம் நாடாளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
- இதன் மூலம் எதிர்காலத்தில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மீதான கட்டணக் கொள்கைகளில் உரிய மாற்றங்களைச் செய்ய மத்திய அரசுக்கு முழுமையான சட்டப்பூர்வ அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
- இதுவரை நடைமுறையில் இருந்த சட்ட விதிகளின்படி வங்கிகள் மற்றும் சேவை வழங்கும் நிறுவனங்கள் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு எத்தகைய கட்டணமும் வசூலிக்க அனுமதி இல்லை.
- ஆனால், நாட்டின் டிஜிட்டல் கட்டமைப்புத் துறையை மேலும் மேம்படுத்தவும், வங்கிகளுக்கு நிலையான வருவாயை உறுதிப்படுத்தவும் இந்த புதிய திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
- இந்தச் சட்டத் திருத்தமானது பணப்பரிவர்த்தனை சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கும், உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கும் நீண்ட கால அடிப்படையில் பெரிதும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

