
6th JULY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
டி20 உலகக்கோப்பை 2026 - ஆஸ்திரேலியா சாம்பியன்
- இங்கிலாந்தில் நடைபெற்ற மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை, அவர்களது சொந்த மண்ணிலேயே வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தைத் தன்வசமாக்கியுள்ளது ஆஸ்திரேலியா.
- லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் எடுத்தது.
- 151 ரன்கள் எடுத்தால் உலக சாம்பியன் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 17.1 ஓவர்களிலேயே 7 விக்கெட் வித்தியாசத்தில் இலக்கை எட்டி, கம்பீரமாக கோப்பையைக் கைப்பற்றியது.
- இந்த வெற்றியின் மூலம், மகளிர் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 7-வது முறை உலகக்கோப்பையை வென்ற ஒரே அணி என்ற மகத்தான சாதனையை ஆஸ்திரேலியா படைத்துள்ளது.
- இதுவரை நடந்த 10 உலகக்கோப்பை தொடர்களில், 7 முறை ஆஸ்திரேலியா மட்டுமே சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
- பிரிக்ஸ் தலைமைத்துவம் 2026-ன் கீழ் கேரளத்தின் கொச்சியில் பிரிக்ஸ் மகளிர் பணிக்குழு கூட்டம் இன்று (06.07.2026) தொடங்கியது. மகளிருக்கு அதிகாரம் அளித்தல், மகளிர் தலைமையிலான வளர்ச்சி, பகிரப்பட்ட நலன்களில் ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் போன்ற முக்கிய விஷயங்கள் பற்றி விவாதிக்கும் இந்த இரண்டு நாள் கூட்டத்தில் பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் மூத்த அரசு அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
- இந்தக் கூட்டத்தில் பிரதிநிதிகளை வரவேற்றுப் பேசிய மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சக செயலாளர் திரு அனில் மாலிக், புவியியல் ரீதியாக நாம் பிரிந்திருந்தாலும் மகளிருக்கு அதிகாரம் அளிப்பதை விரிவுபடுத்துவதற்கான நமது பகிரப்பட்ட உறுதிப்பாட்டில் நாம் நெருக்கமாக இணைக்கப்பட்டிருக்கிறோம் என்றார்.
- மீள்தன்மை, புத்தாக்கம், ஒத்துழைப்பு, நிலைத்தன்மை ஆகியவற்றை கட்டமைத்தல் என்பது இந்தியாவின் பிரிக்ஸ் தலைமைத்துவ கூட்டத்தின் மையப்பொருளாகும். இது மக்களை மையப்படுத்திய மனித சமூகத்தை முதன்மைப்படுத்திய அணுகுமுறையை பிரதிபலிப்பதாகும்.
- பணிக்குழு கூட்டத்தைத் தொடர்ந்து 2026 ஜூலை 8, 9 தேதிகளில் கொச்சியில் இரண்டு நாட்கள் அமைச்சர்கள் நிலையிலான கூட்டம் நடைபெறும்.

