
24th JULY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
முதல்கட்டமாக நடந்த குஷா ஏவுகணை சோதனை வெற்றி
- ரஷ்யாவின் எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்புக்கு இணையாக குஷா நீண்ட தூர ஏவுகணை உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது.
- இத்தகைய குஷா ஏவுகணைகளின் முதல்கட்ட சோதனையை ஒடிசாவின் ஏபிஜே அப்துல்கலாம் தீவில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) சார்பில் நேற்று நடத்தப்பட்டது.
- இதில், அதிவேகம் மற்றும் அதி உயரத்தில் இருந்த வந்த வான்வழி அச்சுறுத்தலைப் போன்று செயல்படும் மின்னணு இலக்கை குஷா ஏவுகணை அமைப்பு துல்லியமாக இடைமறித்து அழித்ததாக பாதுகாப்பு அமைச்சக செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
- இந்திய ரசாயனத் தொழில்துறை மேம்பாட்டுத் திட்டம் எனப்படும் பவ்யா ரசாயன் என்ற திட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- இத்திட்டத்தின் கீழ், மூன்று ரசாயனப் பூங்காக்கள் அமைக்கப்படும். இத்திட்டம் 2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
- 3,030 கோடி ரூபாய் செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். பவ்யா ரசாயனத் திட்டமானது, மூலப்பொருட்கள் உற்பத்தியை அதிகரிப்பதுடன் ரசாயனத் தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
- ரசாயனங்களின் தேவையைக் கருத்தில் கொண்டு உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படும். இதன்மூலம் இந்தத் தொழில்துறை உலகளவில் போட்டித்தன்மை மிக்கதாக மாறும்.
- மருந்துப் பொருட்கள், வேளாண்மை, ஊட்டச்சத்து போன்ற பல்வேறு தொழில்துறைகளில் பயன்படுத்தப்படும் ரசாயனங்களையும், பெட்ரோ ரசாயனங்களையும் பவ்யா ரசாயன் திட்டம் ஊக்குவித்து அவற்றின் உற்பத்தியை மேம்படுத்தும்.
- இத்திட்டத்தின்படி, மூன்று பிரத்யேக ரசாயனப் பூங்காக்களை உருவாக்க மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இவை ஒவ்வொன்றும் 2000 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும்.
- இந்தப் பூங்காக்கள் ரசாயனத் தொழிலுக்கான உள்கட்டமைப்பு, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், சிறந்த நீர் விநியோக அமைப்புகள் உள்ளிட்டவற்றை உள்ளடக்கியதாக இருக்கும்.
- கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் பல்லாரி-குண்டக்கல் பிரிவில் மூன்றாவது, நான்காவது ரயில் வழித்தடங்களை அமைக்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- இத்திட்டம், 1,264 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டம் மக்களின் பயணம், சரக்குப் போக்குவரத்து ஆகியவற்றிக்கு ஊக்கமளிக்கும்.
- கர்நாடகா, ஆந்திரா ஆகிய இரு மாநிலங்களின் மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய இத்திட்டம், ரயில்வேயின் தற்போதைய வழித்தடத்தை 46 கிலோமீட்டர் அளவிற்கு அதிகரிக்கும்.
- ஏழு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இத்திட்டத்தால் பயனடைவார்கள். பல்லாரிக் கோட்டை, குமாரசாமி ஆலயம் போன்ற சுற்றுலாத்தலங்களுக்கு இத்திட்டம் போக்குவரத்து இணைப்பை அதிகரிக்கும்.
- அறிவிக்கப்பட்டுள்ள இந்த வழித்தடம் இரும்புத்தாது, நிலக்கரி, எஃகு, உரங்கள் உள்ளிட்டவற்றை கொண்டு செல்லும் முக்கிய வழித்தடமாகும்.
- தற்போதைய விரிவாக்கப் பணிகளின் மூலம் 16.22 மில்லியன் டன் அளவுக்கு சரக்குப் போக்குவரத்து அதிகரிக்கும். அத்துடன் இப்பகுதியை மக்களின் வேலைவாய்ப்பும், சுயதொழில் வாய்ப்புகளும் மேம்படும்.
- மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், தேர்வு முறைகேடுகளைத் தடுப்பதற்கான 'பொதுத் தேர்வுகள் (முறைகேடுகளை தடுத்தல்) சட்டம் 2024'-இல் கடுமையான திருத்தங்களை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
- அதன்படி, வினாத்தாள் கசிவு உள்ளிட்ட குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ.10 கோடி வரை அபராதமும் விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.
- 'பொதுத் தேர்வுகள் (முறைகேடுகளை தடுத்தல்) சட்டம் 2024'- ன்படி, தற்போது குற்றவாளிகளுக்கு 3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ரூ.10 லட்சம் அபராதமும் விதிக்க முடியும். சட்டத் திருத்தம் நிறைவேறிய பிறகு, சிறைத் தண்டனை 05 முதல் 10 ஆண்டுகள் வரையும், அபராதம் ரூ.10 கோடியும் விதிக்க முடியும்.

