
14th JULY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
நலம் டிஎன் என்ற புதிய இணையதள சேவையை முதல்வர் சி. ஜோசப் விஜய் தொடக்கி வைத்தார்
- சென்னை, மாநிலக் கல்லூரி அரங்கில், செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற நிகழ்ச்சியில், நலம் டிஎன் என்ற புதிய இணையதள சேவையை முதல்வர் தொடக்கிவைத்தார்.
- நலம் டிஎன் இணையதளம் மூலம் கார்ப்பரேட்கள் முதல் பொதுமக்கள் வரையிலான நன்கொடையாளர்கள் தமிழ்நாடு அரசு மருத்துவமனைக்கு எளிமையாக நன்கொடை வழங் முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தொடர்ந்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் 751 உதவி மருத்துவ அலுவலர்கள் மற்றும் 1,393 சுகாதார ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
- ரூ.139.47 கோடி மதிப்பீட்டில் மருத்துவ கட்டடங்களை திறந்து வைத்து, நவீன உபகரணங்களின் பயன்பாட்டினையும் முதல்வர் தொடக்கி வைத்தார்.
- மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்களின்படி, 'நாட்டின் வரி வருவாய் முந்தைய நிதியாண்டை விடப் பல மடங்கு அதிகரித்துள்ளது.
- மொத்த வரி வசூல் (Gross Collection) நடப்பு நிதியாண்டு ஜூலை 13 வரை மொத்த நேரடி வரி வசூல் 16.11% என்ற ஆரோக்கியமான வளர்ச்சியுடன் ரூ. 7,73,681.68 கோடியை எட்டியுள்ளது. கடந்த நிதியாண்டு (FY 2025-26), இதே காலகட்டத்தில் மொத்த வரி வசூல் 6,66,337.20 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
- வழங்கப்பட்ட Refund தொகைகள் போக, அரசின் கைவசமுள்ள நிகர வரி வசூல் 16.40% என்ற அசுர வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
- கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட நிகர கார்ப்பரேட் வரி வசூல் கடந்த ஆண்டின் 1,96,905.48 கோடியிலிருந்து, தற்பொழுது அது 2,40,241.64 கோடியாக உயர்ந்துள்ளது.
- கார்ப்பரேட் அல்லாத தனிநபர் வருமான நிகர வரி வசூல் 3,84,521.23 கோடியாக அதிகரித்துள்ளது. பங்குச்சந்தை முதலீடுகள் மூலமான எஸ்.டி.டி வரி வசூல் கடந்த ஆண்டின் 17,875.88 கோடியிலிருந்து, தற்பொழுது அது 26,428.96 கோடியாகக் கணிசமாக உயர்ந்துள்ளது.
- நடப்பு நிதியாண்டில் ஜூலை 13 வரை, கடந்த ஆண்டை விட 14.57% கூடுதலாக, மொத்தம் 1,22,491.87 கோடி வரி செலுத்துவோருக்குத் திரும்ப வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ. 1,06,912.48 கோடி மட்டுமே ரீஃபண்ட் வழங்கப்பட்டிருந்தது.

