
14th JUNE 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
இந்தியப் புத்தொழில் மாநாடு 2026
- ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ் மற்றும் ஸ்லோவாக்கியாவிற்குப் பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பிரான்ஸில் நரேந்திர மோடியை அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ஆரத்தழுவி வரவேற்றார்.
- நைஸ் நகரில் 2026ஆம் ஆண்டுக்கான இந்தியப் புத்தொழில் மாநாட்டைப் பிரதமர் நரேந்திர மோடி, அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.
- தொடர்ந்து மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, புத்தாக்கம், தொழில்நுட்பம், இளைஞர்களின் விருப்பம் ஆகியவை நாட்டின் இலக்கை எட்டுவதுடன் எதிர்காலத்தையும் வடிவமைப்பதாகக் கூறினார்.
- மேலும், உலகளாவிய சவால்களுக்குத் தீர்வு வழங்கும் நாடாக இந்தியா விளங்குவதாகப் பிரதமர் மோடி தெரிவித்தார்.

