//
Type Here to Get Search Results !

6th FEBRUARY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

TODAY TNPSC CURRENT AFFAIRS 2026 TNPSCSHOUTERS TAMIL & ENGLISH PDF

6th FEBRUARY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

மகளிர் பிரீமியர் லீக் 2026 கோப்பையை வென்றது ஆர்சிபி
  • குஜராத் மாநிலம், வதோதராவில் நேற்று (பிப்ரவரி 5) நடைபெற்ற இறுதிப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி, 204 ரன்கள் எடுக்க வேண்டுமென்ற இலக்கை ஆர்சிபி அணிக்கு நிர்ணயித்திருந்தது.
  • ஆர்சிபி கேப்டன் ஸ்மிருதி மந்தனாவின் 87 ரன்களும், ஜார்ஜியா வோல்லின் 79 ரன்களும் அந்த அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவியது. குறிப்பாக ஸ்மிருதி மந்தனா- ஜார்ஜியா வோல் 92 பந்துகளில் 165 ரன்கள் குவித்தனர்.
  • இது மகளிர் பிரீமியர் லீக்கின் நான்காவது சீசன்.  மும்பை இந்தியன்ஸ் மகளிர் பிரீமியர் லீக்கின் முதல் மற்றும் மூன்றாவது சீசன்களை வென்றது. அதே சமயம் ஆர்சிபி இரண்டாவது மற்றும் நான்காவது சீசன்களை வென்றுள்ளது. 
ஆசிய பிஸ்டல் / ரைபிள் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் 2026
  • டெல்லியில் ஆசிய பிஸ்டல் / ரைபிள் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய நட்சத்திர வீராங்கனை இஷா சிங் மிக சிறப்பாக செயல்பட்டு தங்கப் பதக்கம் வென்றார். 
  • இந்நிலையில் நேற்று நடந்த கலப்பு குழு 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு போட்டியில் இந்திய வீராங்கனை சுருச்சி சிங், இந்திய வீரர் சாம்ராட் ராணா அடங்கிய இணை, அபாரமாக செயல்பட்டு 479.6 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றது. உஸ்பெகிஸ்தானை சேர்ந்த நிகினா செய்குலோவா, முகம்மது கமலோவ் இணை, 481.3 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றது.
  • இந்த போட்டியில் சீன தைபே அணியினர், 412.2 புள்ளிகளுடன் 3ம் இடம் பிடித்து வெண்கலம் வென்றனர். ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் இதுவரை, இரண்டு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கங்கள் வென்றுள்ளனர். 
  • நேற்றைய போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சுருச்சி சிங், கடந்தாண்டு நடந்த ஐஎஸ்எஸ்எப் உலகக் கோப்பை போட்டியில் 4 தங்கப்பதக்கங்கள் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel