
16th FEBRUARY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ரூ. 5,980 கோடி முதலீட்டில் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து
- தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று (பிப். 16) தலைமைச் செயலகத்தில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மினிபியா மிட்சுமி நிறுவனத்தின் துணை நிறுவனமான NMB மினிபியா இந்தியா பிரைவேட் லிமிடெட் 1,980 கோடி ரூபாய் உறுதியளிக்கப்பட்ட முதலீட்டில், 1,400 நபர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் செமிகண்டக்டர், மின் உபகரணங்கள், மோட்டார்கள் உற்பத்தி திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும்; ஏக்வஸ் (Aequs) குழுமம் 4,000 கோடி ரூபாய் உறுதியளிக்கப்பட்ட முதலீட்டில், 7000 நபர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், கிருஷ்ணகிரி மாவட்டம், சிப்காட்- சூளகிரி தொழிற் பூங்காவில் வான்வெளி மற்றும் பாதுகாப்பு உற்பத்திக்கான தொகுப்பு அமைப்பதற்கும், விமான இயந்திரங்கள், கியர்பாக்ஸ் உபபாகங்கள் உற்பத்தி மேற்கொள்வதற்கும் புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டன.
- ஜப்பான் நாட்டை சேர்ந்த மினிபியா மிட்சுமி நிறுவனம், செமிகண்டக்டர் பொருட்கள், மோட்டார்கள், சென்சார்கள், மின் சாதனங்கள் தயாரிப்பதில் நிபுணத்துவம் வாய்ந்த நிறுவனம் ஆகும்.
- NMB மினிபியா இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், மினிபியா மிட்சுமி நிறுவனத்தின் துணை நிறுவனமாகும்.
- ஏக்வஸ் (Aequs) குழுமம், 4,000 கோடி ரூபாய் உறுதியளிக்கப்பட்ட முதலீட்டில், 7,000 நபர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம், SIPCOT-சூளகிரி தொழிற்பூங்காவில் விண்வெளி மற்றும் பாதுகாப்புத்துறை உற்பத்தித் தொகுப்பு அமைப்பதற்கும், விமான இயந்திரம் மற்றும் கியர்பாக்ஸ் உபபாகங்கள் உற்பத்தி ஆலை அமைக்கவும் முன்மொழிந்துள்ளது.
- வங்கதேசத்தின் 13-வது பிரதமராகத் தாரிக் ரஹ்மான் பதவியேற்றார். 17 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது கட்சி மீண்டும் ஆட்சிக்கு வருவதால், இந்தியாவுடனான உறவில் புதிய மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- டாக்கா சென்றடைந்த இந்திய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
- டெல்லியில் செயற்கை நுண்ணறிவு தாக்கம் தொடா்பான ஏஐ உச்சிமாநாடு இன்று (பிப். 16) தொடங்கியது. தில்லி பாரத மண்டபத்தில் நடைபெற்றுவரும் இந்த மாநாட்டின் கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார்.
- இதற்கு முன்பு பிரிட்டன், தென் கொரியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் ஏஐ உச்சி மாநாடு நடைபெற்றுள்ளது. இம்முறை தெற்குலகில் முதல்முறை இந்தியாவில் நடைபெற்று வருகிறது.
- மக்கள், பூமி மற்றும் முன்னேற்றம் ஆகிய மூன்று கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு மனித மூலதனம், அறிவியல், ஏஐ வளங்களை ஜனநாயகமாக்கல், மீள்தன்மை புத்தாக்கம் மற்றும் ஆற்றல், அனைவரையும் உள்ளடக்கிய சமூக அதிகாரமளித்தல், பாதுகாப்பான மற்றும் நம்பகமான ஏஐ, பொருளாதார மேம்பாடு மற்றும் சமூகநலனுக்கான ஏஐ ஆகிய 7 கருப்பொருள்களில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.
- முதல்முறையாக தெற்குலகில் நடைபெறும் இந்த மாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ், பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான், பிரேஸில் அதிபா் லூலா டாசில்வா உள்பட 45 நாடுகளின் அமைச்சக பிரதிநிதிகள் பங்கேற்கின்றனா்.

