
4th JANUARY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
வாரணாசியில் 72வது தேசிய வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியைப் பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார்
- உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் இன்று தொடங்கிய (04.01.2025) 72-வது தேசிய வாலிபால் (கைப்பந்து) போட்டியை பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
- நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு நரேந்திர மோடி, வாரணாசி நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில், அனைத்து வீரர்களையும் வரவேற்று வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைவதாகக் குறிப்பிட்டார்.
- 2026 ஜனவரி 4 முதல் ஜனவரி 11 வரை நடைபெறும் 72-வது தேசிய வாலிபால் (கைப்பந்து) போட்டியில், இந்தியா முழுவதிலுமிருந்து, பல்வேறு மாநிலங்கள், நிறுவனங்களைச் சேர்ந்த 58 அணிகளைச் சேர்ந்த 1,000க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்தப் போட்டி இந்திய கைப்பந்து விளையாட்டின் மதிப்புமிக்க திறமையை வெளிக்கொணரும் போட்டியாகும்.
- இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 329.3 கோடி டாலர் அதிகரித்து 69,661 கோடி டாலராக உள்ளது. டிசம்பர் 26 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 329.3 கோடி டாலர் அதிகரித்து 69,661 கோடி அமெரிக்க டாலராக இருப்பதாக ரிசர்வ் வங்கி இன்று தெரிவித்துள்ளது.
- கடந்த வாரம், மொத்த கையிருப்பு 436.8 கோடி டாலர் அதிகரித்து 69,331.8 கோடி டாலராக உள்ளதாக தெரிவித்தது. மத்திய வங்கி வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில், டிசம்பர் 26ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், கையிருப்பு சுமார் 18.4 கோடி டாலர் அதிகரித்து 55,961.2 கோடி டாலராக உள்ளது.

