
26th JANUARY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
77வது குடியரசு தின விழா மெரினா கடற்கரையில் கவர்னர் ஆர்.என்.ரவி தேசியக்கொடி ஏற்றினார்
- காலை 8 மணிக்கு அங்கிருக்கும் கம்பத்தில் தேசியக் கொடியை கவர்னர் ஆர்.என்.ரவி ஏற்றிவைத்தார். அப்போது அந்தப் பகுதியின் மேல் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் பறந்து வந்து மலர் தூவப்பட்டது. அந்த நேரத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. 5-வது முறையாக கவர்னர் தேசியக் கொடியை ஏற்றி வைத்துள்ளார்.
- பின்னர் ராணுவ படைப்பிரிவு, கடற்படைப் பிரிவு, ராணுவ கூட்டுக் குழல் முரசிசை பிரிவு, வான்படை பிரிவினர் அணிவகுத்து வந்து கவர்னருக்கு வணக்கம் செலுத்தினர். அதை அவர் ஏற்றுக்கொண்டார்.
- அப்போது, கடற்படை ஊர்தியில் போர்க் கப்பலின் சிறிய வடிவம், வான்படை ஊர்தியில் சிறிய வடிவிலான விமானம், கடலோர காவல்படை ஊர்தியில் சிறிய வடிவிலான படகுகள் ஆகியவை அணிவகுத்து கொண்டு வரப்பட்டன.
- இந்தியாவின் 77வது குடியரசு தினம் நாடு முழுக்க இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்திய அரசியல் சாசனம் அமலுக்கு வந்த நாளான குடியரசு தினத்தையொட்டி இன்று டெல்லியில் உள்ள கடமைப் பாதையில் பிரம்மாண்டமான ராணுவ அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
- டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசியக் கொடி ஏற்றி வைத்தார். இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், கவுன்சில் தலைவர் ஆன்டோனியோ கோஸ்டா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

