
15th JANUARY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
காமன்வெல்த் அவைத் தலைவர்களின் 28-வது மாநாட்டைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
- பிரதமர் நரேந்திர மோடி இன்று (15.01.2026) புதுதில்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள சம்விதான் சதனின் மைய மண்டபத்தில் 28-வது காமன்வெல்த் அவைத் தலைவர்கள் (சபாநாயகர்கள்), தலைமை அதிகாரிகள் மாநாட்டை தொடங்கி வைத்தார்.
- மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா, மாநிலங்களவை துணைத் தலைவர் திரு ஹரிவன்ஷ், நாடாளுமன்றங்களுக்கு இடையேயான யூனியன் தலைவர் டாக்டர் துலியா ஆக்சன், காமன்வெல்த் நாடாளுமன்ற சங்கத் தலைவர் டாக்டர் கிறிஸ்டோபர் கலிலா உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
- மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில், உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 42 காமன்வெல்த் நாடுகள், 4 பகுதி அளவு தன்னாட்சி நாடாளுமன்றங்களைச் சேர்ந்த 61 அவைத் தலைவர்களும் (சபாநாயகர்கள்) தலைமை அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

