//
Type Here to Get Search Results !

12th JANUARY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

TODAY TNPSC CURRENT AFFAIRS 2026 TNPSCSHOUTERS TAMIL & ENGLISH PDF

12th JANUARY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

சில்லறைப் பணவீக்கம் 1.33% ஆக உயர்வு
  • காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு காரணமாக, 2025 டிசம்பர் மாதம் சில்லறைப் பணவீக்கம் மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு 1.33% உயர்ந்ததுள்ளது.
  • நவம்பர் மாதத்தில் பணவீக்கம் 0.71% இருந்தது. இதற்கு முந்தைய அதிகபட்ச அளவு செப்டம்பர் மாதத்தில் 1.44% ஆக இருந்தது.
  • நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையில் கணக்கிடப்படும் உணவுப் பணவீக்கம், நவம்பரில் -3.91% உயர்ந்திருந்தாலும், தொடர்ந்து 7வது மாதமாக -2.71% எதிர்மறையாகவே நீடித்தது.
  • 2025 டிசம்பர் மாதத்தில் ஒட்டுமொத்தப் பணவீக்கம் மற்றும் உணவுப் பணவீக்கம் அதிகரித்ததற்கு காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன், முட்டை, மசாலாப் பொருட்கள் மற்றும் பருப்பு வகைகள் ஆகியவற்றின் பணவீக்கம் அதிகரித்ததே முக்கியக் காரணம் என்று நுகர்வோர் விலைக் குறியீட்டுத் தரவுகளை வெளியிடும்போது தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
  • டிசம்பர் மாதத்தில் சில்லறைப் பணவீக்கம் தொடர்ந்து 4-வது மாதமாக இந்திய ரிசர்வ் வங்கியின் குறைந்தபட்ச வரம்பிற்குக் கீழே உள்ளது.
நகரும் இலக்கை தாக்கக்கூடிய பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை சோதனையை டிஆர்டிஓ வெற்றி
  • நகரும் இலக்கை தாக்கக்கூடிய மூன்றாம் தலைமுறை உயர்தர மிக்க பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) வெற்றிகரமாக மேற்கொண்டது.
  • 2026 ஜனவரி 11 அன்று மகாராஷ்டிராவின் அகில்யா நகரில் உள்ள கே.கே. ரேஞ்சஸில், ஐதராபாத்தில் உள்ள டிஆர்டிஓ வின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகம் இச்சோதனையை நடத்தியது.
  • ஐதராபாத்தில் உள்ள இம்ரத் ஆராய்ச்சி மையம், ஜோத்பூரில் உள்ள பாதுகாப்பு ஆய்வகம், பாரத் டைனமிக் நிறுவனம் மற்றும் பாரத் எலக்டரானிக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் உதவியுடன் இந்த ஏவுகணை உருவாக்கப்பட்டது.
இஸ்ரோவின் PSLV C-62 ராக்கெட் தோல்வி
  • ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து புறப்பட்ட பிஎஸ்எல்வி சி62 (PSLV-C62) ராக்கெட் அன்விஷா (EOS-N1) என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோளும், இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 17 சிறிய செயற்கைக்கோள்களும் பொருத்தப்பட்டிருந்தன. 
  • திட்டமிட்டபடி விண்ணில் பாய்ந்த ராக்கெட், சரியாக 8-வது நிமிடத்தில் தனது பாதையிலிருந்து விலகிச் சென்றதால் இஸ்ரோ விஞ்ஞானிகள் அதிர்ச்சியடைந்தனர்.
  • இந்தத் தோல்விக்கான முதற்கட்ட விசாரணையில், ராக்கெட்டின் மூன்றாவது நிலையில் (PS3 stage) ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே காரணம் எனத் தெரியவந்துள்ளது. 
  • 505 கி.மீ தொலைவில் உள்ள சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட வேண்டிய செயற்கைக்கோள்கள், உந்துவிசை குறைந்ததன் காரணமாகக் குறிப்பிட்ட உயரத்தை எட்ட முடியாமல் போயின. 
  • இதனால் ராக்கெட்டில் இருந்த 18 செயற்கைக்கோள்களும் புவி ஈர்ப்பு விசை காரணமாக மீண்டும் வளிமண்டலத்திற்குள் நுழைந்து பசிபிக் பெருங்கடலில் விழுந்து அழிந்தன.
  • கடந்த ஆண்டு ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி61 ராக்கெட்டும் இதேபோன்ற தொழில்நுட்பக் கோளாறால் தோல்வியடைந்த நிலையில், கடந்த 8 மாதங்களில் பிஎஸ்எல்வி ராக்கெட் சந்திக்கும் இரண்டாவது தோல்வி இதுவாகும். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel