
5th DECEMBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
காஞ்சிபுரத்தில் மின்னணு சாதன கண்ணாடி தொழிற்சாலை - முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (5.12.2025) காஞ்சிபுரம் மாவட்டம், சிப்காட் பிள்ளைப்பாக்கம் தொழிற் பூங்காவில், அமெரிக்க நாட்டைச் சேர்ந்த கார்னிங் இண்டர்நேஷனல் கார்ப்பரேஷன் நிறுவனம் மற்றும் இந்திய நாட்டைச் சேர்ந்த ஆப்டிமஸ் இன்ஃப்ராகாம் லிமிடெட் நிறுவனங்களின் கூட்டு நிறுவனமான பாரத் இன்னோவேட்டிவ் க்ளாஸ் டெக்னாலஜீஸ் பிரைவேட் (Bharat Innovative Glass Technologies Private Limited – BIG TECH) நிறுவனம், 1003 கோடி ரூபாய் முதலீட்டில் 840 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் நிறுவியுள்ள மின்னணு சாதனங்களுக்கான உலகத்தரம் வாய்ந்த முன்-கவர் கண்ணாடிப் பொருட்கள் உற்பத்தித் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
- மூன்று நாள் நிதிக் கொள்கை மதிப்பாய்வு கூட்டத்திற்குப் பிறகு, ரெப்போ விகிதம் 5.25% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. பணவீக்கம் வரலாற்று குறைந்த நிலைக்கு ஆளுநர் மல்ஹோத்ரா குறிப்பிட்டதாவது, Q2-ல் சில்லறை பணவீக்கம் வெறும் 1.7%, அக்டோபரில் 0.3% வரை சரிவு ஆகும்.
- இதில் உணவுப் பொருள் விலை குறைவானதே முக்கிய காரணம். நுகர்வோர் விலை பட்டியலில் உள்ள பொருட்களில் 80% இப்போது 4% குறைவான பணவீக்கத்தைக் காட்டுகின்றன.
- பணவீக்கம் தணிந்தாலும், வளர்ச்சி வலுவாக உள்ளது. H1 2025-26-ல் GDP வளர்ச்சி 8% மற்றும் பணவீக்கம் 2.2% ஆகும். வங்கி அமைப்பில் நீடித்த பணப்புழக்கத்தை உறுதி செய்ய, ரூ.1 லட்சம் கோடி OMO கொள்முதல், 3 ஆண்டுக்கு $5 பில்லியன் USD-INR வாங்குதல்-விற்பனை பரிமாற்றம்என ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
- 2025-26-க்கான பணவீக்கம் 2% என்ற புதிய மதிப்பீடு வெளியிடப்பட்டுள்ளது. 2025 Q3 - 0.6%, 2025 Q4 - 2.9%, 2026 Q1 - 3.9%, 2026 Q2 - 4.0% என ஆர்பிஐ இலக்கு வரம்பான 2-6%க்குள் இருப்பதாக கூறப்படுகிறது.

