Type Here to Get Search Results !

4th DECEMBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


4th DECEMBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

போா் விமானங்களிலிருந்து அவசர வெளியேற்ற ஊா்தி - டிஆா்டிஓ வெற்றிகரமாக சோதனை
  • சண்டீகரில் உள்ள சோதனை மையத்தில் ஏரோநாட்டிக்கல் மேம்பாட்டு முகமை (ஏடிஏ), ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் (ஹெச்ஏஎல்) ஆகியவற்றுடன் கூட்டு சோ்ந்து இந்தச் சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
  • தரையில் இருந்து விண்ணில் ராக்கெட் பாய்வதற்கு உதவும் சக்தி அடங்கிய பாகங்கள் கொண்ட ஊா்தியை, சோதனை மையத்தில் அமைக்கப்பட்ட ரயில் தண்டவாளத்தில் செலுத்தி ராக்கெட் ஊா்தி (ராக்கெட் ஸ்லெட்) சோதனை மேற்கொள்ளப்பட்டது.
  • இந்தச் சோதனையின்போது விமானிகள் இருக்கையுடன் போா் விமானத்தின் முன்பாகம் பொருத்திய ராக்கெட் ஊா்தியின் வேகம் படிப்படியாக அதிகரிக்கச் செய்து, அதிகபட்சமாக மணிக்கு 800 கி.மீ. வேகத்தில் செலுத்தப்பட்டது. அதிவேகத்தில் செலுத்திய அந்த ராக்கெட் ஊா்தியிலிருந்து விமானி பாதுகாப்பாக வெளியேறினாா்.
  • ஆபத்தான சூழல்களில் போா் விமானங்களிலிருந்து விமானிகள் கண்ணிமைக்கும் நேரத்தில் வெளியேறித் தப்பிக்க இந்த ராக்கெட் ஊா்தி சோதனை உதவும். இச்சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) செவ்வாய்க்கிழமை மேற்கொண்டது.
புகையிலைப் பொருள்கள் மீது கலால் வரி விதிக்கும் மசோதா - மக்களவை ஒப்புதல்
  • 56-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், சிகரெட், புகையிலைப் பொருள்கள் உள்ளிட்ட சில பொருள்கள் மீது 40 சதவீத சிறப்பு வரி விதிக்கப்பட்டது.
  • புகையிலை, பான் மசாலா உள்ளிட்ட பொருள்கள் மீது கூடுதல் வரி விதிக்க ஏதுவாக அவற்றின் மீது கலால் வரி விதிக்கும் வகையில் 'மத்திய கலால் திருத்தச் சட்ட மசோதா 2025', மற்றும் பான் மசாலா உற்பத்தி மீது புதிய செஸ் வரி விதிக்கும் 'தேசிய பாதுகாப்பு செஸ் மசோதா 2025' ஆகிய இரண்டு மசோதாக்களை மக்களவையில் மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் திங்கள்கிழமை தாக்கல் செய்தாா்.
  • இதில், மத்திய கலால் திருத்தச் சட்ட மசோதா 2025-ஐ மக்களவையில் ஒப்புதல் பெறுவதற்காக புதன்கிழமை அறிமுகம் செய்த நிா்மலா சீதாராமன், 'ஜிஎஸ்டி, இழப்பீடு செஸ் நீக்கத்துக்குப் பிறகு புகையிலை பொருள்கள் மீதான வரி விகிதம் தற்போதைய அளவிலிருந்து குறையும். 
  • அவ்வாறு இந்தப் பொருள்கள் மீதான வரி விகிதம் குறையாமல் முன்தைய உயா் அளவிலேயே விதிக்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில், அவற்றின் மீது கலால் வரி விதிப்பு நடைமுறை கொண்டுவரப்படுகிறது. 
  • கரோனா காலத்தில் மாநிலங்களின் வருவாய் இழப்பை ஈடு செய்ய வாங்கப்பட்ட கடன் ஓரிரு வாரங்களில் திரும்பச் செலுத்தப்படும். அதன் பிறகு இழப்பீட்டு செஸ் இருக்காது என்பதால் இந்த மசோதா அவசியமாகிறது.
  • சிறு விவாதத்துக்குப் பிறகு, குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. தற்போது சிகரெட், புகையிலை, ஹுக்கா, ஜா்தா உள்ளிட்ட பிற புகையிலைப் பொருள்கள் மீது 28 சதவீத ஜிஎஸ்டியும் கூடுதலாக செஸ் வரியும் விதிக்கப்படுகின்றன.
  • மத்திய நிதியமைச்சா் அறிமுகம் செய்த மசோதாவில், உற்பத்தி செய்யப்படாத புகையிலை பொருள்கள் மீது 60 முதல் 70 சதவீத கலால் வரி விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 
  • சுருட்டு வகைகள் மீது 25 சதவீத கலால் அல்லது 1,000 சிகாா் அல்லது செரூட்களுக்கு ரூ. 5,000 வீதம் வரி விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 65 மி.மீ. நீளம் கொண்ட ஃபில்டா் இல்லாத சிகரெட்டுகளுக்கு 1,000 சிகரெட்டுகளுக்கு ரூ. 2,700 வீதமும், 65மி.மீ. முதல் 75மி.மீ. நீளம் கொண்ட சிகரெட்கள் மீது ரூ. 4,500 அளவிலும் கலால் வரி விதிக்கப்பட உள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel