
2nd DECEMBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
பிரதமர் அலுவலகத்தின் பெயரை 'சேவா தீர்த்' (புனிதமான சேவைத்தலம்) என்று பெயர் மாற்றம்
- ராஜ் பவன்களை தொடர்ந்து பிரதமர் அலுவலகத்தின் பெயரை 'சேவா தீர்த்' (புனிதமான சேவைத்தலம்) என்று பெயர் மாற்றம் செய்யப்படுவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
- பிரதமர் அலுவலகம் அமைச்சரவைச் செயலகம், தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் மற்றும் இந்தியா ஹவுஸ் ஆகியவற்றின் அலுவலகங்களையும் உள்ளடக்கும், இது வருகை தரும் பிரமுகர்களுடன் உயர் மட்ட பேச்சுவார்த்தைகளுக்கான இடமாக இருக்கும்.
- “சேவா தீர்த்தம்” என்பது சேவை உணர்வைப் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு பணியிடமாகவும், தேசிய முன்னுரிமைகள் வடிவம் பெறும் இடமாகவும் இருக்கும் எனவும் இந்தியாவின் பொது நிறுவனங்கள் அமைதியான ஆனால் ஆழமான மாற்றத்திற்கு உட்பட்டுள்ளன.
- ஆட்சி என்ற யோசனை ‘சத்தா’ (அதிகாரம்) இலிருந்து ‘சேவா’ (சேவை) க்கும், அதிகாரத்திலிருந்து பொறுப்புக்கும் நகர்கிறது, இந்த மாற்றம் நிர்வாக ரீதியாக மட்டுமல்ல, கலாச்சார மற்றும் தார்மீக ரீதியானது.
- பிரதமர் நரேந்திர மோடியின் கீழ், ‘கர்த்தவ்ய’ (கடமை) மற்றும் வெளிப்படைத்தன்மையை பிரதிபலிக்கும் வகையில் நிர்வாக இடங்கள் மறுவடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் “ஒவ்வொரு பெயரும், ஒவ்வொரு கட்டிடமும், ஒவ்வொரு சின்னமும் இப்போது ஒரு எளிய யோசனையை சுட்டிக்காட்டுகின்றன. சேவை செய்ய அரசாங்கம் உள்ளது.
- சமீபத்தில், ராஷ்டிரபதி பவனில் இருந்து இந்தியா கேட் வரை மரங்கள் நிறைந்த அவென்யூவான ராஜ்பாத்தை, கர்த்தவ்ய பாதை என்று அரசாங்கம் மறுபெயரிட்டது.
- இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி 2025-26 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் 8.2% ஆக உயர்ந்துள்ளது.
- இது கடந்த ஆறு காலாண்டுகளில் இல்லாத அதிகபட்ச வளர்ச்சியாகும் என்று ஒன்றிய அரசு தெரிவித்தது. ஆனால் சர்வதேச நாணய நிதியம் இந்த ஜிடிபி கணக்கீட்டை சி கிரேடு அறிக்கை என்று தெரிவித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
- இந்தியாவின் பொருளாதாரத் திட்டமிடல் மற்றும் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றும் புள்ளிவிவரங்களின் தரம் இந்தியாவில் குறைவாக உள்ளது. இந்தியாவின் தேசியக் கணக்கு விவரங்களின் தரத்திற்கு 'சி' கிரேடு (இரண்டாவது மிகக் குறைந்த மதிப்பீடு) அடிப்படையில் உள்ளது.
- கடந்த நவம்பர் மாதத்தில் 1,70,276 கோடி ஜிஎஸ்டி வசூல் ஆகியுள்ளது. முந்தைய ஆண்டு ஆண்டு நவம்பரில் 1,69,016 கோடி வசூல் ஆகியிருந்தது. இத்துடன் ஒப்பிடுகையில் 0.7 சதவீதம் அதிகரித்துள்ளது.
- கடந்த அக்டோபர் மாதத்தில் முந்தைய ஆண்டை விட 4.6 சதவீதம் அதிகரித்து, ரூ.1.95 லட்சம் கோடி வசூலானது. கடந்த மாதத்தில் வசூல் குறைந்ததற்கு ஜிஎஸ்டி வரி குறைப்பும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.
- நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான 8 மாதங்களில் ரூ.14,75,488 கோடி வசூலானது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 8.9 சதவீத வளர்ச்சியாகும்.
- தேசிய நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பை மேம்படுத்தவும் தடையற்ற போக்குவரத்து அனுபவத்தை ஏற்படுத்தவும் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
- தேசிய நெடுஞ்சாலைகளில் தொலைத்தொடர்பு அடிப்படையிலான பாதுகாப்பு எச்சரிக்கை முறையை அறிமுகப்படுத்துவதற்காக இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- ஜியோவின் 4ஜி மற்றும் 5ஜி சேவையைப் பயன்படுத்தும் பயணிகள் தங்களது மொபைல் போன்களில் முன்கூட்டியே எச்சரிக்கை தகவல்களை பெறமுடியும்.
- விபத்து பகுதிகள், விலங்குகள் நடமாடும் பகுதிகள், பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகள் மற்றும் அவசர கால மாற்றுப்பாதை குறித்த தகவல்களை இதன் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
- இத்தகவல்களை உரிய நேரத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிப்போருக்கு அளிப்பதன் மூலம் அவர்கள் அதற்கேற்றால் போல் தங்களது வாகனங்களை இயக்க வகை செய்யப்படுகிறது. இந்த எச்சரிக்கை தகவல்களை குறுஞ்செய்தி, வாட்ஸ்அப், ஆகியவற்றின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

