
26th DECEMBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
K-4 ஏவுகணை சோதனை வெற்றி
- நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து தாக்கும் வகையில் k - 4 எனும் ஏவுகணையை இந்திய பாதுகாப்புத்துறை வடிவமைத்திருக்கிறது. அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலான 'ஐ.என்.எஸ். அரிகாட்'டில் (INS Arighat) இருந்து இந்தியா, இந்த ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்திருக்கிறது.
- இந்தச் சோதனை விசாகப்பட்டினம் கடற்கரையில்(டிச. 25) நடைபெற்றது. அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலான 'ஐ.என்.எஸ். அரிகாட்'டில் (INS Arighat) இருந்து இந்தியா, இந்த ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்திருக்கிறது.
- இந்தச் சோதனை விசாகப்பட்டினம் கடற்கரையில் நேற்று (டிச. 25) நடைபெற்றது. நீருக்கடியில் இருந்து அணு ஆயுத தாக்குதல்களை நடத்தும் திறனை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஏவுகணை இந்திய கடற்படைகளுக்கு மிகவும் பேருதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
- முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இந்த 'K-4' ஏவுகணை 12 மீட்டர் நீளமும், 17 டன் எடையும் கொண்டது. நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. திட எரிபொருளால் இந்த 'கே - 4' ஏவுகணை இயங்கும் என்று கூறப்படுகிறது.
- 3,500 கி.மீ., துாரம் வரை சென்று இலக்கைத் தாக்கும் திறன் கொண்டது. இந்த ஏவுகணை மூலம் எதிரியின் எல்லையை நெருங்காமலேயே கடலின் ஆழமான பகுதியில் இருந்தபடி அணு ஆயுததத்தாக்குதலை நடத்த முடியும்.
- இந்திய பேட்மிண்டன் நட்சத்திர வீராங்கனை பிவி சிந்து. இவர் உலக பேட்மிண்டன் சம்மேளனத்தின் விளையாட்டு வீரர்கள் கமிஷனின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
- இவர் 2026ம் ஆண்டு முதல் 2029ம் ஆண்டு வரை பதவி காலம் வகிப்பார். மேலும், அவர் கவுன்சிலின் உறுப்பினராகவும், வாக்குரிமை கொண்ட உறுப்பினராகவும் பணியாற்றுவார். டென்மார்க்கின் கேத்ரின் ரோசன்கிரென் துணைத் தலைவராகப் பணியாற்றுவார்.
- ஆமி பர்னெட் (அமெரிக்கா), குய்லூம் கெயில்லி (பிரான்ஸ்), அபு ஹுபைடா (இந்தியா), மற்றும் தாரெக் அப்பாஸ் கரிப் சஹ்ரி (எகிப்து) ஆகியோர் ஆணையத்தின் மற்ற உறுப்பினர்கள் செயல்படுவர். சிந்து 2017 முதல் இந்த கமிஷனில் உறுப்பினராக பணியாற்றி வருகிறார்.
- 2020 முதல் உலக பேட்மிண்டன் சம்மேளனத்தின் இன்டெக்ரிட்டி அம்பாசிடராகவும் இருந்து வருகிறார். அவர் இரண்டு முறை ஒலிம்பிக் பதக்க வென்றவர் மற்றும் 2019 உலக சாம்பியன் என்பது குறிப்பிடத்தக்கது.

