
இந்தியாவில் காப்புரிமை (Patents) தாக்கல் செய்வதில் தமிழ்நாடு முதலிடம்
- தொழில் வழிகாட்டி நிறுவனம் வெளியிட்டுள்ள இந்திய காப்புரிமைப் பதிவுகளில் தமிழ்நாடு மாபெரும் வளர்ச்சி கண்டுள்ளது; மற்ற மாநிலங்களை விட மிக பெரிய இடைவெளியுடன் 23 சதவீதம் வளர்ச்சிகண்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது என்னும் விவரம் தெரியவந்துள்ளது.
- அதாவது, இந்தியாவில் காப்புரிமை (Patents) தாக்கல் செய்வதில் தமிழ்நாடு முதலிடம் பிடித்து, நாட்டின் அறிவுசார் தலைநகராகத் தனது நிலையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
- இந்திய அளவில் பதிவுக்காக விண்ணப்பிக்கப்பட்ட மொத்தம் (68,201), காப்புரிமைகளில் தமிழ்நாடு மட்டுமே 15,440 காப்புரிமைகளைப் பதிவு செய்துள்ளது.
- இது நாட்டின் மொத்த எண்ணிக்கையில் ஏறத்தாழ 23 சதவீதம் ஆகும். இப்படி, காப்புரிமை பெறுவதில் மற்ற மாநிலங்களை விடத் தமிழ்நாடு மிகப்பெரிய இடைவெளியில் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- முந்தைய 2023-2024 ஆம் நிதியாண்டோடு ஒப்பிடுகையில், 2024-2025 ஆம் நிதியாண்டில் காப்புரிமை தாக்கல் செய்வது 9,565-லிருந்து 15,440- ஆக உயர்ந்துள்ளது.
- இந்த 62 சதவீதம் வளர்ச்சி, மாநிலத்தில் உள்நாட்டுக் கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சிப் பணிகள் அதிவேகமாக விரைவுபடுத்தப்பட்டு வருவதைப் பிரதிபலிக்கிறது.
- தமிழ்நாட்டின் ஆழமான ஆராய்ச்சித் தளம், வலுவான தொழில்முறை வலிமை, கல்வி நிறுவனங்களுக்கும் - தொழில் துறையினருக்கும் இடையே நிலவும் நெருக்கமான ஒருங்கிணைந்த சூழல் (Academia-Industry Ecosystem) ஆகியவை இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனைக்கு இவை முக்கியக் காரணங்களாக அமைந்துள்ளன.
- ஏப்ரல் 1 முதல் டிசம்பர் 17 வரையிலான காலகட்டத்தில், நிகர நேரடி வரி திரும்ப வழங்குவதில் ஏற்பட்ட காலதாமதத்தால், வசூல் 8% அதிகரித்து ரூ.17.04 லட்சம் கோடி உயர்ந்ததாக வருமான வரி துறை அறிவித்துள்ளது.
- இதில் ரூ.8.17 லட்சம் கோடிக்கு அதிகமான கார்ப்பரேட் வரியும், ரூ.8.47 லட்சம் கோடி கார்ப்பரேட் அல்லாத வரியும் இதில் அடங்கும்.
- நடப்பு நிதியாண்டில், டிசம்பர் 17ஆம் தேதி வரையான, பத்திர பரிவர்த்தனை வரியிலிருந்து கிடைத்த வருவாய் ரூ.40,195 கோடியாக இருந்தது.
- அதே வேளையில், கடந்த ஆண்டை காட்டிலும் பணத்தை திரும்ப வழங்குவது 14% குறைந்து, ரூ.2.97 லட்சம் கோடிக்கும் அதிகமாக இருந்தது.
- வருமான வரித் துறை தரவுகளின் அடிப்படையில், பணத்தைத் திரும்ப செலுத்துவதை சரிசெய்வதற்கு முன், மொத்த நேரடி வரி வசூல் டிசம்பர் 17ஆம் தேதி வரை 4.16% வளர்ச்சியடைந்து ரூ.20.01 லட்சம் கோடியை கடந்தது.
- நடப்பு நிதியாண்டில், நேரடி வரி வசூல் முந்தைய ஆண்டை விட 12.7% அதிகரித்து, ரூ. 25.20 லட்சம் கோடியாக இருக்கும் என அரசு மதிப்பிட்டுள்ளது. 2026 நிதியாண்டில் பத்திர பரிவர்த்தனை வரியிலிருந்து சுமார் ரூ.78,000 கோடி வசூலிக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
- சண்டிகரில் செயல்பட்டு வரும் டெர்மினல் பாலிஸ்டிக் ஆராய்ச்சி ஆய்வகத்தின் ரயில் டிராக் ராக்கெட் ஸ்லெட் வசதியில், 2025 டிசம்பர் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் ககன்யான் மனித விண்வெளி திட்டத்துடன் தொடர்புடைய முக்கிய சோதனைகளை இஸ்ரோ வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
- இந்த சோதனைகள், ககன்யான் விண்கலம் பூமிக்கு திரும்பும் போது அதன் வேகத்தை பாதுகாப்பாகக் குறைக்க உதவும் ட்ரோக் பாராசூட்களின் தகுதி மற்றும் நம்பகத்தன்மையை மதிப்பிடும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டவை.

