Type Here to Get Search Results !

டிஎன்பிஎஸ்சி 2026 ஆம் ஆண்டுக்கான கால அட்டவணை / TNPSC ANNUAL PLANNER 2026

டிஎன்பிஎஸ்சி 2026 ஆம் ஆண்டுக்கான கால அட்டவணை / TNPSC ANNUAL PLANNER 2026
  • டிஎன்பிஎஸ்சி 2026 ஆம் ஆண்டுக்கான கால அட்டவணை / TNPSC ANNUAL PLANNER 2026: தமிழகத்தில் அரசு துறைகளில் வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் பல லட்சம் தேர்வர்கள் எதிர்பார்த்து இருந்த ஆண்டு கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் முன்கூட்டியே தேர்வுக்கு தயாராகும் வகையில் Annual planner ஐ டிஎன்பிஎஸ்சி வெளியிட்டு வருகிறது.
  • அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஆண்டு கால அட்டவணையை இன்று டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதன்விவரம் வருமாறு;
  • ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - I (தொகுதி I பணிகள்)- அறிவிக்கை வெளியிடப்படும் நாள்; 23.06.2026- தேர்வு நடைபெறும் நாள்; 06.09.2026
  • ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு (பட்டயம் / தொழிற்பயிற்சி தரம்) அறிவிக்கை வெளியிடப்படும் நாள்: 07.07.2026 -தேர்வு நடைபெறும் நாள்; 20.09.2026
  • ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - II (தொகுதி II மற்றும் IIA பணிகள்): தேர்வு அறிவிக்கை நாள்; 11.08.2026-தேர்வு நடைபெறும் நாள்; 25.10.2026
  • ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு பதவிகள்) - தேர்வு அறிவிக்கை நாள்-31.08.2026.. தேர்வு நடைபெறும் நாள்:14.11.2026
  • ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - IV (தொகுதி IV பணிகள்) தேர்வு அறிவிப்பு வெளியிடப்படும் நாள் 06.10.2026- தேர்வு நடைபெறும் நாள்: 20.12.2026
  • தேர்வர்கள் தங்களை தேர்வுக்கு ஆயத்தப்படுத்திக்கொள்வதற்காக மட்டும் இந்த உத்தேச ஆண்டுத் திட்டம் வெளியிடப்படுகிறது. ஆண்டுத் திட்டத்தில் தேர்வுகள் சேர்க்கவோ அல்லது நீக்கவோ செய்யப்படலாம். காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அறிவிக்கையில் வெளியிடப்படும்.
  • தேர்வுகளுக்கான பாடத் திட்டம் மற்றும் தேர்வுத் திட்டம் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. இவை அறிவிக்கை வெளியிடும் நாள்வரை மாற்றங்களுக்கு உட்பட்டது.
  • அறிவிக்கை தொடர்பான விவரங்களுக்கு தேர்வாணைய இணையதளத்தினை தொடர்ந்து கவனித்து வரவும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel