
19th DECEMBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
G RAM G மசோதா ராஜ்யசபாவில் நிறைவேற்றம்
- கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.
- கடந்த 2005ல் கொண்டு வரப்பட்ட இந்த திட்டம் மத்திய அரசின் மிக முக்கியமான திட்டமாக இருந்து வருகிறது. இந்தச் சூழலில் தான் இந்தத் திட்டத்தை மாற்றி அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது.
- நாடாளுமன்றத்தில் இப்போது குளிர்காலக் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்திற்குப் பதிலாக விக்க்சித் பாரத்- ரோஸ்கர் மற்றும் ஆஜீவிகா மிஷன் (கிராமின்) அதாவது விபி-ஜி ராம் ஜி என்ற திட்டத்தைக் கொண்டு வர மசோதாவை அறிமுகப்படுத்தியது. இருப்பினும், இதற்கு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
- மகாத்மா காந்தி பெயர் நீக்கப்பட்டதைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். காந்தியின் பெயரை நீக்கவே மத்திய அரசு இதைச் செய்வதாகக் காங்கிரஸ் விமர்சித்தது.
- மேலும், இது மாநிலங்களின் நிதிச் சுமையை அதிகரிக்கும் என்றும் பல்வேறு எதிர்க்கட்சி எம்பிகள் விமர்சித்தனர். அதாவது 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் செலவுகளை மத்திய அரசே ஏற்கும்.
- ஆனால், இந்த திட்டத்தில் 60%ஐ மத்திய அரசு கொடுக்கும் நிலையில், 40% மாநில அரசு கொடுக்க வேண்டும். இதற்கும் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின.
- இருப்பினும், இந்த மசோதா லோக்சபாவில் வியாழக்கிழமை பிற்பகல் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து ராஜ்யசபாவிலும் வியாழன் மாலை தொடங்கி இரவு வரை விவாதம் நடைபெற்றது. எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவைக் கடுமையாக எதிர்த்தனர்.
- ஜி ராம்ஜி மசோதாவை நாடாளுமன்றக் கூட்டுக்குழு விவாதத்திற்கு அனுப்ப வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தனர். இருப்பினும், இது ராஜ்யசபாவில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிராகரிக்கப்பட்டது.
- தொடர்ந்து எதிர்க்கட்சியினரின் கடும் அமளிக்கு மத்தியில் இந்த மசோதா ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது.
- இந்திய உருமாற்றத்திற்காக அணுசக்தியை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாமல் பயன்படுத்தும் நோக்கில் 'ஷாந்தி' மசோதா நாடாளுமன்ற மேலவையில் இன்று நிறைவேறியது.
- இந்த மசோதா நேற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று மாநிலங்களவையிலும் ஒப்புதல் பெற்றது. மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
- இது தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து என குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டன. இருப்பினும் விவாதங்களுக்கு பிறகு இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்டது.
- இதையடுத்து மசோதா ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட உள்ளது. அவர் ஒப்புதல் வழங்கினால், 1962 அணுசக்தி சட்டம் மற்றும் 2010 குடிமக்கள் பொறுப்பு சட்டங்களுக்கு மாற்றாக இந்த புதிய சட்டம் அமலுக்கு வரும்.
- அணுசக்தித் துறையில் தனியார் பங்களிப்புக்கும் வழி திறக்கும் இந்த மசோதா, 80 ஆண்டுகளுக்குப் பிறகு மேற்கொள்ளப்படும் மிகப் பெரிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.

