//
Type Here to Get Search Results !

18th DECEMBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


18th DECEMBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஷ்னைடர் எலெக்ட்ரிக் குழுமத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
  • முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஷ்னைடர் எலெக்ட்ரிக் குழுமம் 718 கோடி ரூபாய் முதலீட்டில் 663 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சென்னை மற்றும் கோயம்புத்தூரில் அமைந்துள்ள Schneider Electric India Private Limited (SEIPL) நிறுவனத்தின் ஆலைகளின் விரிவாக்கம் மற்றும் ஓசூரில் Schneider Electric IT Business India Private Limited (SEITB) நிறுவனத்தின் மின்கலன்கள் (Batteries) மற்றும் குளிர்விப்பு தீர்வுகளுக்கான (Cooling solutions) புதிய ஆலை அமைக்கும் திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
  • ஷ்னைடர் எலெக்ட்ரிக் குழுமம், மின்சாரம் மற்றும் மின்னணு சாதனங்கள் உற்பத்தி மற்றும் மின் மேலாண்மை தீர்வுகள் ஆகியவற்றில் ஈடுபட்டு வருகிறது. 
  • சுமார் 30 வருடங்களாக, தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் இக்குழுமம், தனது நிலையை மேலும் வலுப்படுத்தும் வகையில், சென்னை மற்றும் கோயம்புத்தூரில் அமைந்துள்ள ஸ்மார்ட் உற்பத்தி ஆலைகளை விரிவுபடுத்தவும், ஓசூரில் ஒரு புதிய அதிநவீன உற்பத்தி ஆலை நிறுவவும் முதலமைச்சர் முன்னிலையில் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 
பிரதமர் மோடி முன்னிலையில்  இந்தியா - ஓமன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து
  • பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக நேற்று ஓமன் சென்றிருந்தார். இந்நிலையில், இன்று இரு தலைவர்கள் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. 
  • இதன்மூலம், ஓமனுக்கு இந்தியா ஏற்றுமதி செய்யும் பொருட்களில் 98.08% பொருட்களுக்கு இறக்குமதி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இதேபோல், இந்தியாவுக்கு ஒமன் ஏற்றுமதி செய்யும் பொருட்களில் 77.79% பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
  • இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தம், ஓமனின் வரி விதிப்பு பிரிவுகளில் 98.08% பொருட்களுக்கு சுங்க வரி விலக்கை அளிக்கிறது. இது இந்தியாவின் ஏற்றுமதி மதிப்பில் 99.38% ஆகும்.
  • ஜவுளி, தோல், காலணிகள், ரத்தினங்கள், நகைகள், பொறியியல் பொருட்கள், பிளாஸ்டிக், விவசாய பொருட்கள், மருந்துகள், மருத்துவ சாதனங்கள், ஆட்டோமொபைல்கள் உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய ஏற்றுமதித் துறைகள் முழுமையான சுங்கவரி விலக்கால் பயனடையும்.
இந்தியாவின் 5 மாதங்கள் காணாத அளவு குறைந்த வா்த்தகப் பற்றாக்குறை
  • பொறியியல் மற்றும் மின்னணு பொருள்கள் ஏற்றுமதி உயா்வால் அக்டோபரில் சரிந்த ஏற்றுமதி நவம்பரில் 19.37 சதவீதம் உயா்ந்து 3813 கோடி டாலராக உள்ளது. 
  • இது, கடந்த மே மாதத்துக்கு (3,873 கோடி டாலா்) பிந்தைய அதிகபட்ச இறக்குமதி. மேலும் இது, கடந்த 3.5 ஆண்டுகள் காணாத மிக வேகமான மாதாந்திர வளா்ச்சி.
  • மதிப்பீட்டு மாதத்தில் நாட்டின் இறக்குமதி 1.88 சதவீதம் குறைந்து 6,266 கோடி டாலராக உள்ளது. தங்கம், கச்சா எண்ணெய், நிலக்கரி, கோக் இறக்குமதி குறைந்தது இதற்கு முக்கிய காரணம். 
  • அந்த மாதத்தில் தங்கம் இறக்குமதி 59.15 சதவீதம் சரிந்து 400 கோடி டாலராகவும், கச்சா எண்ணெய் இறக்குமதி 11.27 சதவீதம் சரிந்து 1411 கோடி டாலராகவும் உள்ளது.
  • இறக்குமதி குறைந்ததால் வா்த்தகப் பற்றாக்குறை முந்தைய 5 மாதங்களில் இல்லாத அளவாக நவம்பரில் 2,453 கோடி டாலராக உள்ளது. 
  • இதற்கு முன்னா் கடந்த ஜூனில் 1,878 கோடி டாலராக இருந்ததே குறைந்தபட்ச வா்த்தகப் பற்றாக்குறை. அது கடந்த அக்டோபரில் உச்சபட்சமாக 4,168 கோடி டாலராக இருந்தது.
  • நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-நவம்பா் காலகட்டத்தில் ஏற்றுமதி 2.62 சதவீதம் உயா்ந்து 29,207 கோடி டாலராகவும், இறக்குமதி 5.59 சதவீதம் உயா்ந்து 51,521 கோடி டாலராகவும் உள்ளது. வா்த்தகப் பற்றாக்குறை 22,314 கோடி டாலராக உள்ளது.
  • இந்திய பொருள்களுக்கு அமெரிக்கா 50 சதவீத கூடுதல் வரி விதித்திருந்த நிலையை சமாளித்து கடந்த நவம்பரில் நாட்டின் ஏற்றுமதி உயா்ந்துள்ளது.
  • அந்த மாதத்தில் பெட்ரோலிய பொருள்கள் ஏற்றுமதி 11.65 சதவீதம் உயா்ந்து 393 கோடி டாலராக உள்ளது. தேநீா், காபி, இரும்புத் தாது, முந்திரி, எண்ணெய் உணவு, பால்பொருள்கள், கைவினைப் பொருள்கள், கடல் உணவு, தோல் பொருள்கள் ஆகியவற்றின் ஏற்றுமதியும் உயா்ந்தன. அரிசி, எண்ணெய் விதைகள், கம்பளம், பிளாஸ்டிக் பொருள்களின் ஏற்றுமதி சரிந்தது.
  • கடந்த நவம்பரில் ஐக்கிய அரபு அமீரகம், நெதா்லாந்து, சீனா, பிரிட்டன், ஜொ்மனி, சிங்கப்பூா், வங்கதேசம், சவுதி அரேபியா, ஹாங்காங் ஆகியவை இந்தியாவின் முக்கிய ஏற்றுமதிச் சந்தைகளாகத் திகழ்ந்தன.
  • நடப்பு நிதியாண்டின் முதல் 8 மாதங்களில் ஏற்றுமதி சுமாா் 27,000 கோடி டாலராக உயா்ந்துள்ளது. 2024-25-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் அது 24,856 கோடி டாலராக இருந்தது.
  • இந்தியாவின் பொருள்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதி 53,316 கோடி டாலரில் இருந்து 5.83 சதவீதம் உயா்ந்து 56,213 கோடி டாலராக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வளர்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புத் திட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
  • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் மாற்றங்களைக் கொண்டுவருவதற்கான விபி ஜி ராம் ஜி எனப்படும், வளர்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புத் திட்ட மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
  • இதில், மகாத்மா காந்தியின் பெயரை நீக்கப்படுவதைக் கண்டித்து, நாடாளுமன்ற வளாகத்தில், மல்லிகார்ஜுன கார்கே, டிஆர் பாலு, கனிமொழி உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் ஊர்வலமாகச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். 
  • மக்களவையில் மசோதா மீது அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் பதில் அளித்தபோது, எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக எழுந்து நின்று முழக்கமிட்டதால் கடும் அமளி நிலவியது.
  • தொடர்ந்து பேசிய சவுகான், ஊரக வேலை உறுதி திட்டத்தின் தொடக்கத்தில், மகாத்மா காந்தியின் பெயர் இல்லை என்றார். அமைச்சருக்கு எதிரே மசோதா நகலை கிழித்து வீசி, எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர். 
  • தொடர்ந்து கடும் அமளிக்கு மத்தியில் விபி ஜி ராம் ஜி மசோதா, குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
ஸ்குவாஷ் உலகக் கோப்பையை முதல்முறை வென்று சாதனை
  • வோ்ல்ட் ஸ்குவாஷ், எஸ்ஆா்எஃப்ஐ, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி சென்னை எக்ஸ்பிரஸ் மால் வளாகத்தில் கடந்த 9-ஆம் தேதி தொடங்கியது. இதில் நடப்பு சாம்பியன் எகிப்து, ஈரான், ஆஸ்திரேலியா, பிரேஸில் உள்பட 12 நாடுகளின் அணிகள் பங்கேற்றன.
  • அதன் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறிய இந்தியா, ஹாங்காங் சீன அணியை எதிர்த்து இறுதி ஆட்டத்தில் களம் கண்டது. அதன் தொடக்க ஆட்டத்தில் மூத்த வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா ஹாங்காங்கின் கா யி லீயை 3-1 என வீழ்த்தினாா்.
  • ஆடவா் ஒற்றையரில் அபய் சிங் ஹாங்காங்கின் அலெக்ஸ் லாவுடன் மோதினாா். இதில் 19 நிமிஷங்களில் 3-0 என வென்றாா் அபய் சிங். இரண்டாவது மகளிா் ஒற்றையரில் அனாஹத் சிங்கும்-டோமடோ ஹோவும் மோதினா்.
  • இதில் அனாஹத் 3-0 என வென்றாா். இந்த வெற்றியின் மூலம் முதன்முறையாக இந்திய அணி உலக சாம்பியன் பட்டத்தை வென்று வரலாறு படைத்தது.
பிரதமர் மோடிக்கு ஓமனில் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு
  • பிரதமர் நரேந்திர மோடிக்கு ஓமனில், The First Class of the Order of Oman எனும் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டிருக்கிறது. நெல்சன் மண்டேலா, ராணி எலிசெபத் உள்ளிட்ட உலக தலைவர்களுக்கு பிறகு, இந்த விருதை பெறும் தலைவர் என்கிற பெருமையை பிரதமர் மோடி பெற்றிருக்கிறார்.
  • இந்த உயரிய கௌரவத்தை, இரு நாடுகளின் தொன்மையான நட்பிற்கும், இந்தியா மற்றும் ஓமன் மக்களின் 140 கோடி பேரின் பரஸ்பர அன்பு, பாசத்திற்கும் அர்ப்பணிப்பதாகப் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel