
13th DECEMBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
காப்பீட்டு துறையில் 100% அந்நிய முதலீடு மசோதாவுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்
- இந்திய காப்பீட்டு துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 100 சதவீதமாக உயர்த்துவதற்கான மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.
- மக்களவை அறிக்கையின்படி, காப்பீட்டு துறையில் முதலீட்டை அதிகரிக்கவும், வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை துரிதப்படுத்தவும், வணிகம் செய்வதை எளிதாக்கும் வகையில் காப்பீட்டு சட்டங்கள் (திருத்த) மசோதா 2025 உருவாக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அறிமுகம் செய்ய பட்டியலிடப்பட்ட 13 சட்டங்களில் இதுவும் ஒன்றாகும்.
- இந்த ஆண்டு பட்ஜெட் உரையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், புதிய தலைமுறை நிதித் துறை சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டு வரம்பை தற்போதுள்ள 74 சதவீதத்திலிருந்து 100 சதவீதமாக உயர்த்தும் திட்டத்தை முன்மொழிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

