
11th DECEMBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
ஐநா சாம்பியன்ஸ் ஆஃப் தி எர்த் விருது 2025
- தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு, ஐ.நா.வால் சுற்றுச் சூழல் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உயரிய விருதான "சாம்பியன்ஸ் ஆஃப் எர்த்" விருதினை பெற்றுள்ளார்.
- இயற்கை பாதுகாப்பில் காட்டும் ஊக்கம் மற்றும் செயல்பாடுகளுக்காக, சுப்ரியா சாகுவிற்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையால் கடந்த 20 ஆண்டுகளாக இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
- சுற்றுச்சூழலில் மாற்றத்தை ஏற்படுத்தும் செயல்களைக் கொண்ட தனிநபர்கள், குழுக்கள் மற்றும் அமைப்புகளை UNEP-யின் சாம்பியன்ஸ் ஆஃப் தி எர்த் கௌரவிக்கிறது.
- இந்த விருது ஐ.நா.வின் மிக உயர்ந்த சுற்றுச்சூழல் கௌரவமாகும். கடந்த 2005ம் ஆண்டு முதல் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு துணை நிற்கும் 127 பேருக்கு இந்த விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நடப்பாண்டில் 5 பேருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- நபார்டு வங்கியின் கிராமப்புற பொருளாதார சூழல் தொடர்பான எட்டாவது சுற்று ஆய்வில் (ஆர்இசிஎஸ்எஸ்), கடந்த ஆண்டில் கிராமப்புற தேவைகளில் பெரிய அளவிலான அதிகரிப்பும், வருமான உயர்வும் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
- ஆர்இசிஎஸ்எஸ் என்பது செப்டம்பர் 2024 முதல் நபார்டு வங்கியால் நடத்தப்படும், இருமாத மதிப்பீடாகும். இந்த ஆய்வு, கிராமப்புற பொருளாதார மாற்றங்களை மதிப்பிட உதவும் தரவுத்தொகுப்பை வழங்குகிறது.
- கடந்த ஒரு வருடமாக கிராமப்புற பொருளாதார அடிப்படைகள் தெளிவாக வலுப்பெற்றுள்ளன. வலுவான நுகர்வு, அதிகரித்து வரும் வருமானம், மிதமான பணவீக்கம், ஆரோக்கியமான நிதிச் சூழல் ஆகியவற்றால், நாட்டின் கிராமப்புற வளர்ச்சி நேர்மறையான பாதையில் செல்கிறது.
- அறிக்கையின் முக்கிய அம்சங்கள் கீழ்வருமாறு
- வாங்கும் சக்தி அதிகரிப்பால் நுகர்வு அதிகரிப்பு.
- கடந்த ஆண்டில் சுமார் 80% கிராமப்புற குடும்பங்கள் தொடர்ந்து அதிக நுகர்வைப் பதிவு செய்துள்ளன. இது அதிகரித்து வரும் செழிப்பின் அடையாளமாகும்.
- மாத வருமானத்தில் 67.3% இப்போது நுகர்வுக்காக செலவிடப்படுகிறது.
- கிராமப்புற குடும்பங்களில் 42.2% வருமான வளர்ச்சியை அடைந்துள்ளன.
- வெறும் 15.7% பேர் மட்டுமே வருமான சரிவைச் சந்தித்துள்ளனர்.
- 75.9% பேர் அடுத்த ஆண்டு வருமானம் உயரும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
- சாலைகள், கல்வி, மின்சாரம், குடிநீர், சுகாதார சேவைகள் போன்றவற்றில் கிராமப்புற குடும்பத்தினர் அதிக திருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
- நபார்டின் கிராமப்புற பொருளாதார சூழல் கணக்கெடுப்பு, இந்தியா முழுவதும் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. இது வருமானம், நுகர்வு, பணவீக்கம், கடன், முதலீடு, எதிர்பார்ப்புகள் தொடர்பான மக்களின் எண்ணங்கள், தரவுகள் என இரண்டையும் எதிரொலிக்கிறது.
- இந்தியாவின் நீர்வழிப் போக்குவரத்தில் புதிய சகாப்தத்தை உருவாக்கும் வகையில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எரிபொருளால் இயங்கும் கப்பலை (Hydrogen Fuel Cell Vessel) மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை மந்திரி சர்பானந்த சோனோவால் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
- வாரணாசியில் உள்ள நமோ காட் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மத்திய மந்திரி சர்பானந்த சோனோவால், இந்த கப்பலின் வணிகச் செயல்பாடுகளை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.
- தூய்மையான மற்றும் நிலையான உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்தை உறுதி செய்வதில் இது ஒரு முக்கியமான மைல்கல் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

