
23rd NOVEMBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் போட்டி 2025 - லக்ஷயா சென் சாம்பியன்
- ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற சூப்பா் 500 இறுதிப் போட்டியில் ஜப்பான் வீரா் யுஷு டனகாவுடன் இந்தியாவின் லக்ஷயா சென் மோதினார்.
- இந்தப் போட்டியில், லக்ஷயா சென் 38 நிமிஷங்களில் 21-15, 21-11 என இரண்டு கேம்களிலும் அசத்தலாக வென்று தனது இரு காதுகளிலும் கைகளை வைத்துக் கொண்டாடினார்.
- இதன்மூலம் இந்த சீசனில் தனது முதல் பட்டத்தை லக்ஷயா சென் பெற்றுள்ளார். மிகவும் கடினமான இந்த சீசனில், லக்ஷயா சென் தனது முதல் பட்டத்தை வென்று அசத்தியுள்ளார்.
- தென்னாப்பிரிக்காவின் ஜொகன்னஸ்பர்கில் இன்று (23.11.2025) நடைபெற்ற ஐபிஎஸ்ஏ (IBSA) எனப்படும் இந்தியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா தலைவர்கள் கூட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்.
- இந்த கூட்டத்தை தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா தலைமையேற்று நடத்தினார். பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா ட சில்வாவும் இதில் கலந்து கொண்டார்.
- இந்தக் கூட்டம் சரியான நேரத்தில் நடைபெறுவதாக கூறிய பிரதமர், ஆப்பிரிக்க மண்ணில் நடைபெற்ற முதல் ஜி20 உச்சிமாநாட்டுடன் சேர்ந்து இது நடைபெற்றுள்ளதாக அவர் கூறினார்.
- வளரும் நாடுகள் (உலகளாவிய தெற்கு நாடுகள்) தொடர்ச்சியாக நான்கு முறை ஜி20 தலைமைத்துவ பொறுப்பை வகித்து வருவதை அவர் குறிப்பிட்டார்.
- அதில் மூன்று கடைசி மூன்று முறை ஐபிஎஸ்ஏ உறுப்பு நாடுகள் ஜி20 தலைமைத்துவத்தை ஏற்று நடத்தி உள்ளதாக அவர் தெரிவித்தார்.

