Type Here to Get Search Results !

புதிய தொழிலாளர் சட்டம் 2025 / NEW LABOUR CODE 2025


  • புதிய தொழிலாளர் சட்டம் 2025 / NEW LABOUR CODE 2025: முந்தைய தொழிலாளர் சட்டத்தில் பெண்களை நைட்ஷிப்ட்டில் பணியாற்ற கட்டுப்பாடுகள் இருந்த நிலையில் புதிய சட்டத்தில் பெண்களையும் இனி நைட்ஷிப்ட்டில் பணியமர்த்தலாம் எனவும், ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சம்பளம் வழங்க வேண்டும் என்பது உள்பட 8 முக்கிய பாயிண்ட்டுகள் முக்கியமானதாக உள்ளன. அதன் விவரம் வருமாறு:
  • மத்திய அரசு சார்பில் பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் தொழிலாளர்களின் நலன்களை பாதுகாக்க சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 
  • அந்த வகையில் புதிதாக 4 தொழிலாளர் சட்ட தொகுப்புகளை (New Labour Code) மத்திய அரசு இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு கொண்டு வந்துள்ளது. 
  • அதாவது தொழிலாளர் ஊதியச் சட்டம் 2019, தொழில்துறை தொடர்புகள் சட்டம் 2020, சமூகப் பாதுகாப்புச் சட்டம் 2020 மற்றும் தொழில்முறைப் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணியிடச் சூழல் சட்டம் 2020 உள்ளிட்டவை தான் அந்த புதிய தொழிலாளர் சட்ட தொகுப்புகளாகும்.
  • ஏற்கனவே நடைமுறையில் இருந்த பல்வேறு தொழிலாளர் சட்டங்கள் என்பது நம் நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பு அல்லது சுதந்திரம் அடைந்த பிறகு சிறிது காலத்தில் இயற்றப்பட்டவையாக உள்ளன. 
  • இது தற்போதைய சூழலில் சிக்கல் நிறைந்தாகவும், தனித்தனி பிரிவாகவும் உள்ளன. இதனை தற்போதைய காலத்துக்கு ஏற்ப மாற்றப்பட்டுள்ளது.

f

முக்கிய 8 பாயிண்ட்

  • புதிய தொழிலாளர் சட்டம் 2025 / NEW LABOUR CODE 2025: அதன்படி இந்த 4 சட்ட தொகுப்புகள் ஏற்கனவே நம் நாட்டில் நடைமுறையில் இருந்த 29 தொழிலாளர் சட்டங்களை ஒருங்கிணைத்து நான்கு சட்டங்களாக மாற்றி கொண்டு வரப்பட்டுள்து. 
  • தொழிலாளர் நலன் சார்ந்த விதிகளை மேம்படுத்தி தொழிலாளர்களை பாதுகாப்பது, பணியிட சூழலில் அவர்களுக்கு சீரமைப்பை கொண்டு வருவது, பணிப்பாதுகாப்பை கொண்டு வருவது உள்ளிட்டவற்றின் அடிப்படையில் இந்த சட்ட தொகுதிகள் கொண்டு வரப்பட்டுள்ளது. 
  • இந்த 4 புதிய சட்ட தொகுப்புகள் தொழிலாளர்களுக்கு பல்வேறு உத்தரவாதங்களை வழங்குகிறது. 

1. பணி நியமன கடிதம் கட்டாயம்

  • புதிய தொழிலாளர் சட்டம் 2025 / NEW LABOUR CODE 2025: முந்தைய தொழிலாளர் சட்டத்தின்படி தொழிலாளர்களுக்கு நியமன கடிதம் வழங்க வேண்டாம். ஆனால் புதிய தொழிலாளர் சட்டத்தின் படி நியமனம் கடிதம் வழங்க வேண்டும். 
  • அது வெளிப்படையாக எழுத்துப்பூர்வமாக இருக்க வேண்டும். பணி பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இருக்க வேண்டும்.

2. டெலிவரி ஊழியர்களுக்கு இன்சூரன்ஸ்

  • முந்தைய தொழிலாளர் சட்டம் வரையறுக்கப்பட்ட அளவில் மட்டுமே சமூக பாதுகாப்பை வழங்கியது. இந்த புதிய தொழிலாளர் சட்டத்தின்படி gig (ஆன்லைன் டெலிவரி ஊழியர்கள்) மற்றும் platform workers (ஆன்லைன் பிளாட்பார்ம் பணியாளர்கள்) உள்ளிட்டவர்களுக்கும் சமூக பாதுகாப்பை வழங்குகிறது. அனைத்து ஊழியர்களுக்கும் பிஎஃப், இஎஸ்ஐசி, இன்சூரன்ஸ் உள்ளிட்ட சமூக பாதுகாப்பை வழங்க உள்ளது.

3. ஓவர் டைம் பணிக்கு இரட்டை சம்பளம்

  • புதிய தொழிலாளர் சட்டம் 2025 / NEW LABOUR CODE 2025: பழைய தொழிலாளர் சட்டம் என்பது அட்டவணைப்படுத்தப்பட்ட தொழில்துறை, ஊழியர்களுக்கு மட்டும் குறைந்தபட்ச ஊதியத்தை வழங்கும். இதில் பல தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் என்பது இல்லாத நிலை உள்ளது. 
  • இதனை மாற்றும் வகையில் 2019 ஊதிய கோட்பாட்டின்படி அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் பெறுவதை உறுதி செய்கிறது. அதேபோல் சம்பளத்தை உரிய தேதியில் வழங்க வழிவகை செய்கிறது. 
  • அதேபோல் ஓவர் டைம் பணிக்கு இரட்டை சம்பளம் வழங்க வேண்டும். இந்த சம்பளம் தொழிலாளர்களின் வழக்கமான சம்பளத்தில் இருந்து கணக்கிட்டு வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

4. உடல்நல பரிசோதனை கட்டாயம்

  • பழைய சட்டத்தின்படி தொழிலளாளர்களுக்கு ஆண்டுதோறும் உடல்நல பரிசோதனை மேற்கொள்ள சட்டத்தில் இடம் அளிக்கப்படாமல் இருந்தது. ஆனால் தற்போது 40 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஆண்டுக்கு ஒருமுறை உடல்நல பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும்.

5. பைனான்ஸ் ஸ்டெபிலிட்டி

  • புதிய தொழிலாளர் சட்டம் 2025 / NEW LABOUR CODE 2025: முந்தைய சட்டத்தில் தொழிலாளர்களின் பைனான்ஸ் ஸ்டெபிலிட்டியை உறுதி செய்ய வேண்டிய முதலாளிகளுக்கு இல்லை. 
  • ஆனால் புதிய சட்டத்தில் பைனான்ஸ் ஸ்டெபிலிட்டியை உறுதி செய்ய வேண்டும். தொழிலாளர்களின் பணி அழுத்தத்தை குறைத்து தொழிலாளர்களின் மனஉறுதியை அதிகரிக்க உத்தரவாதம் செய்கிறது.

6. பெண்களுக்கு நைட்ஷிப்ட்

  • பழைய சட்டத்தில் பெண் ஊழியர்களுக்கு இரவு பணி உள்பட இன்னும் சிலவற்றில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால் தற்போதைய சட்டம் அனைத்து துறைகளிலும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்து ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என்பதை உறுதி செய்துள்ளது. 
  • மேலும் பெண்களின் சம்மதம் பெற்று உரிய பாதுகாப்பு நடவடிக்கைளுடன் அனைத்து நிறுவனங்களிலும் இரவிலும் அவர்களை பணியமர்த்தி உரிய சம்பளம் வழங்கலாம் என்பதை உறுதி செய்கிறது.
  • குறிப்பாக சுரங்கம் மற்றும் கனரக இயந்திரம் சார்ந்த தொழில்களிலும் பெண்களை இரவு ஷிப்ட்டில் பணி அமர்த்த இந்த சட்டம் வழி வகுத்து கொடுத்துள்ளது.

7. ESIC பலனில் மாற்றம்

  • புதிய தொழிலாளர் சட்டம் 2025 / NEW LABOUR CODE 2025: பழைய சட்டத்தில் இஎஸ்ஐசி (ESIC) கவரேஜ் என்பது குறிப்பிட்ட தொழில்களுக்கு மட்டுமே உள்ளது. சொல்லப்போனால் 10க்கும் குறைவான பணியாளர்களை கொண்ட நிறுவனங்கள் இதில் பயன்பெற முடியாது. 
  • அதேபோல் அபாயகரமான செயல்முறை (Hazardous Process) பிரிவில் பணியாற்றுவோருக்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான ESIC கவரேஜ் இல்லை.
  • புதிய சட்டத்தில்ESIC கவரேஜ் மற்றும் பலன்கள் இந்தியா முழுவதும் ஒரே மாதிரியாக தொழிலாளர்கள் பலன் பெறலாம். 10க்கும் குறைவான பணியாளர்களைக் கொண்ட நிறுவன ஊழியர்களுக்கும் இஎஸ்ஐசி-யின் பலனை பெற முடியும்.

8. ஒற்றை பதிவில் பலன்

  • முந்தைய சட்டத்தின்படி ஒவ்வொரு நிறுவனங்களும் பல பதிவு, உரிமங்களை கொண்டிருக்கும். ஆனால் தற்போதைய புதிய சட்டத்தில் பான்- இந்தியா முறையில் ஒற்றை பதிவில் ஒவ்வொரு நிறுவனங்களின் தொழிலாளர்களும் பலன்களை பெறலாம் என்பன உள்ளிட்ட 8 பாயிண்ட்டுகள் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

ENGLISH

  • NEW LABOUR CODE 2025: While the previous Labor Act had restrictions on women working in night shifts, the new law has 8 important points, including the fact that women can now be employed in night shifts and that women should be paid equally to men. The details are as follows:
  • Special measures are being taken by the Central Government to protect the interests of workers working in various sectors. In this regard, the Central Government has brought 4 new labor laws (New Labor Code) into force across the country from today. 
  • Namely, the Workers' Wages Act 2019, the Industrial Relations Act 2020, the Social Security Act 2020 and the Occupational Safety, Health and Workplace Environment Act 2020.
  • The various labor laws that were already in force were enacted before or shortly after our country gained independence. This is complicated in the current environment and is a separate section. This has been changed according to the current times.

8 Key Points

  • NEW LABOUR CODE 2025: Accordingly, these 4 sets of laws have been brought into four laws by combining the 29 labor laws that were already in force in our country. 
  • These sets of laws have been brought on the basis of improving labor welfare rules and protecting workers, bringing them harmony in the workplace environment, and bringing job security. These 4 new sets of laws provide various guarantees to workers. You can see its 8 key points here.

1. Appointment letter mandatory

  • According to the previous labor law, no appointment letter was issued to workers. But according to the new labor law, an appointment letter must be issued. It must be clearly written. It must be in a way that ensures job security.

2. Insurance for delivery workers

  • NEW LABOUR CODE 2025: The previous labor law provided social security only to a limited extent. According to this new labor law, it also provides social security to gig (online delivery workers) and platform workers. All employees will be provided with social security including PF, ESIC, insurance.

3. Double pay for overtime work

  • The old labour law provided minimum wage only to employees in scheduled industries. Many workers do not have minimum wage. In order to change this, the 2019 wage law ensures that all workers receive minimum wage. 
  • It also provides for payment of salary on due date. Similarly, double pay should be paid for overtime work. It has been stated that this salary should be calculated from the regular salary of the workers.

4. Mandatory health check-up

  • NEW LABOUR CODE 2025: According to the old law, there was no provision in the law for employers to conduct annual health check-ups for workers. But now everyone above the age of 40 should undergo health check-ups once a year.

5. Financial stability

  • In the previous law, employers were not required to ensure the financial stability of workers. But in the new law, financial stability should be ensured. It reduces the work pressure of workers and ensures that the morale of workers is increased.

6. Night shift for women

  • NEW LABOUR CODE 2025: The old law imposed restrictions on women employees, including night work. But the current law has ensured that women should be paid at par with men in all sectors. 
  • It also ensures that women can be employed at night in all companies with the consent of women and appropriate safety measures and be paid accordingly. 
  • This law has paved the way for women to be employed in night shifts, especially in mining and heavy machinery industries.

7. Change in ESIC benefits

  • In the old law, ESIC coverage was only available to specific industries. In fact, companies with less than 10 employees could not benefit from it. Similarly, those working in the Hazardous Process category did not have uniform ESIC coverage across the country.
  • In the new law, ESIC coverage and benefits will be available to workers across India in the same way. Employees of companies with less than 10 employees can also get the benefits of ESIC.

8. Benefits in a single registration

  • NEW LABOUR CODE 2025: According to the previous law, each company would have multiple registrations and licenses. But in the current new law, 8 points are considered important, including that the workers of each company can get the benefits in a single registration on a pan-India basis.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel