
19th NOVEMBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
கோவையில் நடைபெற்ற இயற்கை வேளாண் கூட்டமைப்பு கண்காட்சி 2025ஐ பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
- கோவையில் நடைபெற்ற தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று (19-11-25) கோவை வந்தார்.
- அதன் பின்னர், கொடிசியா வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இயற்கை வேளாண் கூட்டமைப்பு கண்காட்சியை அவர் தொடங்கி வைத்தார்.
- அதன் தொடர்ச்சியாக இயற்கை வேளாண் கூட்டமைப்பு மாநாட்டை அவர் தொடங்கி வைத்தார். இதையடுத்து நாடு முழுவதும் உள்ள 9 கோடி விவசாயிகளுக்கு ரூ.18,000 கோடிக்கும் அதிகமான தொகையை, பி.எம். கிஷான் (PM-KISAN) திட்டத்தின் 21வது தவணையைப் பிரதமர் மோடி வெளியிட்டார்.
- மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறையின் தொழில்நுட்ப நிறுவனமான தொலைத்தொடர்பு மையம் தில்லி இந்திரபிரஸ்தா தகவல் தொழில்நுட்ப நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
- தொலைத்தொடர்பு குறித்த ஆராய்ச்சிப் பணிகள் மற்றும் நவீன தொலைத் தொடர்பு தொழில்நுட்பத்தில் பங்களிப்பது மற்றும் சர்வதேச தரநிலைகளுக்கான நடவடிக்கைகள் தொடர்பாக இவ்விரு நிறுவனங்களும் இணைந்து ஆய்வுகளை மேற்கொள்ள இது வகை செய்கிறது.
- ஆப்டிகல் தகவல் தொடர்பு 6ஜி மொபைல் சேவை என்ற நவீன தொழில்நுட்பங்கள் இணையதளம் வாயிலான சேவைகள், தொலைத்தொடர்புத் துறையில் ஆராய்ச்சிப் பணிகளில் பரிசோதனை கட்டமைப்பு மற்றும் குறிப்பிட்ட தரநிலைகளை வடிவமைப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

