
13th NOVEMBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
SCM Garments பிரைவேட் லிமிடெட் நிறுவனம் முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
- முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று (நவ. 13) தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்வில், திருவாரூர் மாவட்டத்தில் ரூ. 50 கோடி முதலீட்டில்
- 2500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், SCM Garments பிரைவேட் லிமிடெட் நிறுவனம் (தி சென்னை சில்க்ஸ் குழுமம்) ஆடை உற்பத்தி அலகு அமைக்கும் திட்டத்திற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
- ஜவுளித்துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் SCM Garments குழுமத்தின் துணை நிறுவனமான SCM Garments பிரைவேட்லிமிடெட் நிறுவனம் (தி சென்னை சில்க்ஸ் குழுமம்), உலகப் புகழ் பெற்ற நிறுவனங்களை வாடிக்கையாளர்களாகக் கொண்ட ஆடைகள் தயாரிக்கும் நிறுவனமாகும்.
- இந்நிறுவனம், 50 கோடி ரூபாய் முதலீட்டில் 2500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், திருவாரூர் மாவட்டத்தில் ஆடை உற்பத்தி அலகு அமைத்திட திட்டமிட்டுள்ளது.
- தில்லி செங்கோட்டை அருகேவுள்ள லால் கிலா மெட்ரோ ரயில் நிலையத்தின் முதல் வாயில் அருகே நவ. 10ஆம் தேதி கார் ஒன்று மெதுவாகச் சென்று கொண்டிருக்கும்போது திடீரென வெடித்துச் சிதறியது.
- அருகிலிருந்த மற்ற வாகனங்களும் தீப்பிடித்து எரிந்ததால், இச்சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்தனர். 24 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
- கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ள தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) 10 பேர் கொண்ட சிறப்புக் குழுவை அமைத்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.
- இந்நிலையில், பூடானிலிருந்து தில்லி திரும்பிய பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டி ஆலோசனை மேற்கொண்டார்.
- இக்கூட்டத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், மூத்த உளவுத் துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
- இக்கூட்டத்திற்கு பிறகு தில்லி கார் வெடிப்பு சம்பவம் பயங்கரவாத தாக்குதலாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இத்துடன் சில தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
- மேலும், தேச விரோத சக்திகளால் நிகழ்த்தப்பட்ட கார் வெடிப்பு சம்பவத்தை கடுமையாக கண்டிப்பதாகவும், இந்தத் தாக்குதலில் உயிரிழந்த அப்பாவி மக்களுக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்வதாகவும் படுகாயம் அடைந்தவர்கள் விரைந்து குணமடைய வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
- பயங்கரவாதம் எந்த வடிவில் நுழைந்தாலும் அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், கார் வெடிப்பு சம்பவத்தில் இந்தியாவுக்கு உலக நட்பு நாடுகள் ஆதரவுக் கரம் நீட்டியுள்ளதை அமைச்சரவை வரவேற்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கார் வெடிப்புக்குப் பிறகு விரைந்து செயல்பட்ட பாதுகாப்பு அமைப்புகள், அவசர கால பணியாளர்கள் மற்றும் குடிமக்களின் பணிகளை பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
- குற்றவாளிகளை விரைந்து கண்டறிந்து நீதி கிடைக்கச் செய்ய உயர்நிலை விசாரணை குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
- குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், முதல் முறை ஏற்றுமதி செய்பவர்கள் மற்றும் தொழிலாளர் சார்ந்த துறைகளின் நலனைக் கருத்தில் கொண்டு, இந்தியாவின் ஏற்றுமதி போட்டித்தன்மையை வலுப்படுத்துவதற்கு 2025–26 மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ஒரு முதன்மை முயற்சியான ஏற்றுமதி ஊக்குவிப்பு இயக்கத்திற்கு (இ.பி.எம்) பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- 2025–26 நிதியாண்டு முதல் 2030–31 நிதியாண்டு வரை ரூ.25,060 கோடி மொத்த செலவினத்துடன், ஏற்றுமதி ஊக்குவிப்புக்கான விரிவான, நெகிழ்வான மற்றும் டிஜிட்டல் முறையில் இயக்கப்படும் கட்டமைப்பை இந்த இயக்கம் ஏற்படுத்தும்.
- மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், சீசியம், கிராஃபைட், ரூபிடியம் மற்றும் சிர்கோனியம் ஆகியவற்றின் ராயல்டி விகிதத்தை பின்வருமாறு குறிப்பிட/திருத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது:
- சீசியம்: உற்பத்தி செய்யப்படும் தாதுவில் உள்ள சீசியம் உலோகத்தின் மீது விதிக்கப்படும் சீசியம் உலோகத்தின் சராசரி விற்பனை விலையில் ராயல்டி விகிதம் 2% விதிக்கப்படும்.
- கிராஃபைட எண்பது சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட நிலையான கார்பனுடனான கிராஃபைட்டுக்கு, மதிப்பின் அடிப்படையில் விதிக்கப்படும் வரியின் சராசரி விற்பனை விலையில் 2% ராயல்டியாக விதிக்கப்படும்.
- எண்பது சதவீதத்திற்கும் குறைவான நிலையான கார்பனுடனான கிராஃபைட்டுக்கு, மதிப்பின் அடிப்படையில் விதிக்கப்படும் வரியின் சராசரி விற்பனை விலையில் 4% ராயல்டியாக விதிக்கப்படும்.
- ரூபிடியம்: உற்பத்தி செய்யப்படும் தாதுவில் உள்ள ரூபிடியம் உலோகத்தின் மீது விதிக்கப்படக்கூடிய ரூபிடியம் உலோகத்தின் சராசரி விற்பனை விலையில் 2% ராயல்டியாக விதிக்கப்படும்.
- சிர்கோனியம்: உற்பத்தி செய்யப்படும் தாதுவில் உள்ள சிர்கோனியம் உலோகத்தின் மீது விதிக்கப்படக்கூடிய சிர்கோனியம் உலோகத்தின் சராசரி விற்பனை விலையில் 1% ராயல்டியாக விதிக்கப்படும்.
- மத்திய அமைச்சரவையின் மேற்கண்ட முடிவு, சீசியம், ரூபிடியம் மற்றும் சிர்கோனியம் ஆகியவற்றைக் கொண்ட கனிமத் தொகுதிகளை ஏலம் விடுவதை ஊக்குவிக்கும்.
- கிராஃபைட்டின் ராயல்டி விகிதங்களை மதிப்பு அடிப்படையில் நிர்ணயிப்பது, தரங்கள் முழுவதும் கனிமத்தின் விலையில் ஏற்படும் மாற்றத்தை விகிதாசாரமாக பிரதிபலிக்கும்.
- இந்த கனிமங்களின் உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு, இறக்குமதியைக் குறைக்கவும், விநியோகச் சங்கிலி பாதிப்புகளைக் குறைக்கவும், நாட்டில் வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் வழிவகுக்கும்.
- கிராஃபைட், சீசியம், ரூபிடியம் மற்றும் சிர்கோனியம் ஆகியவை உயர் தொழில்நுட்ப பயன்பாடுகள் மற்றும் எரிசக்தி மாற்றத்திற்கு முக்கியமான கனிமங்கள் ஆகும்.
- உறுப்பினர் கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு 100% கடன் உத்தரவாத காப்பீட்டை வழங்குவதற்காக, ஏற்றுமதியாளர்களுக்கான கடன் உத்தரவாதத் திட்டத்தை அறிமுகப்படுத்த பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- இதன் மூலம், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (எம்எஸ்எம்இ) உட்பட தகுதியான ஏற்றுமதியாளர்களுக்கு ரூ.20,000 கோடி வரை கூடுதல் கடன் வசதிகளை வழங்க முடியும்.
- பிரான்ஸ் அரசின் உயரிய விருதான செவாலியே விருது தோட்டா தரணிக்கு வழங்கப்பட்டது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரான்ஸ் அரசின் மையத்தில் தோட்டா தரணிக்கு செவாலியே விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
- கலை, இலக்கியம், அறிவியலில் சிறந்து விளங்குபவர்களை கவுரவிக்கும் விதமாக பிரான்ஸ் அரசு செவாலியே விருது வழங்கி வருகிறது. முன்னதாக தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகர் சிவாஜி, கமல் உள்ளிட்டோர் செவாலியே விருதை பெற்றுள்ளனர்.

