Type Here to Get Search Results !

8th OCTOBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


8th OCTOBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

வீடூரில் 2000 ஆண்டு பழமையான தமிழ் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிப்பு
  • விழுப்புரம் மாவட்டத்தின் வீடூர் கிராமத்தில் அண்மையில் நடைபெற்ற மேற்பரப்பு ஆய்வில் 2000 ஆண்டுகள் பழமையான தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 
  • இரண்டு பானை ஓடுகளில் "நோறா I" மற்றும் "பசி" என்ற தமிழ் சொற்கள் தமிழ் பிராமி எழுத்துக்களால் குறிக்கப்பட்டுள்ளன. மேலும் ஒரு பானை ஓட்டில் தொன்மை காலத்தில் பயன்பாட்டில் இருந்த குறியீடுகளும் காணப்படுகின்றன.
நாகமலை குன்று 4-வது உயிரியல் பாரம்பரிய தளமாக அறிவிப்பு
  • தமிழ்நாடு அரசு, உயிரியல் பன்மைச் சட்டம் 2002, பிரிவு 37(1)ன் கீழ், அரிட்டாபட்டியை நவம்பர் 2022 இல் பல்லுயிர் பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டது, காசம்பட்டி மார்ச் 2025 இல் அறிவிக்கப்பட்டது மற்றும் எலத்தூர் ஏரி செப்டம்பர் 2025-ல் அறிவிக்கப்பட்டது. 
  • இதனைத் தொடர்ந்து 32.22.50 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்ட ஈரோடு மாவட்டத்திலுள்ள நாகமலை குன்றினை மாநிலத்தின் நான்காவது உயிரியல் பாரம்பரியத் தளமாக அறிவித்துள்ளது.
  • பல்லுயிர் பாரம்பரியத் தளங்கள் என்பவை, தனித்துவமான மற்றும் நலிந்த சுற்றுச்சூழல் அமைப்புகளை ஆதரிக்கும் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாகும். 
  • இவை அரிய, அச்சுறுத்தலுக்கு உள்ளான மற்றும் முக்கிய நலிந்த இனங்களைப் பாதுகாக்கின்றன, பரிணாம முக்கியத்துவத்தைப் பேணிப் பாதுகாக்கின்றன, இவை இயற்கையுடனான கலாசாரப் பிணைப்புகளை வலுப்படுத்துகின்றன. 
  • அதன் நிலப்பரப்பில் உள்ள ஆழமான நீர்நிலைகள், ஆழமற்ற ஓரங்கள், சேற்று நிலங்கள் (மட்பிளாட்கள்) மற்றும் பாறைப் பகுதிகள் ஆகியவை வளமான பல்லுயிர்களை ஆதரிக்கின்றன. 
  • தமிழ்நாடு ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு (2024) நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி, இங்கே 138 தாவர இனங்கள், 118 பறவை இனங்கள் (30 இடம்பெயரும் மற்றும் 88 உள்ளூர்), 7 பாலூட்டிகள், 11 ஊர்வனங்கள், 5 சிலந்திகள் மற்றும் 71 பூச்சியினங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதைக் காட்டுகின்றன.
  • இங்குள்ள முக்கிய உயிரினங்களில் பெரிய புள்ளிகள் கொண்ட கழுகு, வெளிறிய பூனைப் பருந்து மற்றும் பென்னெல்லிஸ் கழுகு ஆகியவை அடங்கும்.
  • தாவரங்களைப் பொறுத்தவரை, 48 இனங்கள் மற்றும் 114 பேரினங்களின் கீழ் வரும் 138 தாவர இனங்கள் உள்ளன. இதில் 125 இருவித்திலைத் தாவரங்கள் மற்றும் 13 ஒருவித்திலைத் தாவரங்கள் அடங்கும்.
இந்தியாவின் முதல் முழுமையான டிஜிட்டல் விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்
  • பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 8 புதன்கிழமை நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தின் (NMIA) முதல் கட்டத்தை திறந்து வைத்தார். இந்தியாவின் முதல் முழுமையான டிஜிட்டல் விமான நிலையம் என்ற பெருமையை இந்த விமான நிலையம் பெற்றுள்ளது. 
  • ஆண்டுக்கு 2 கோடி பயணிகளை இந்த விமான நிலையம் கையாளும் என்றும் இந்த ஆண்டின் இறுதிக்குள் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • நவி மும்பை விமான நிலையம் ரூ.19,650 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இது பல விமான நிலையங்களைக் கொண்ட நகரங்கள் அல்லது பரந்த பெருநகரப் பகுதிகளின் உலகளாவிய பட்டியலில் மும்பையை சேர்க்கிறது. லண்டன், நியூயார்க் மற்றும் டோக்கியோ ஆகியவை அடங்கும்.
2025-26ம் நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.5% - உலக வங்கி கணிப்பு
  • அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன், டி.சி.-யில் அமைந்துள்ள உலக வங்கி உலகநாடுகளில் பொருளாதாரத்தை கண்காணிக்கும் சர்வதேச நிறுவனமாக உள்ளது. இந்நிலையில் 2025-26 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.3 சதவீதமாக இருக்கும் என உலக வங்கி கணித்திருந்தது.
  • அமெரிக்காவின் வர்த்தக வரிவிதிப்பு மற்றும் உலகநாடுகளிடையேயான ஏற்பட்டுள்ள போர் பதற்றம் போன்ற காரணங்களால் இந்தியா கடுமையாக பாதிக்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில் தற்போது உலக வங்கி தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளது.
  • அதன்படி, 2025-26ம் நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.5%ஆக இருக்கும் என உலக வங்கி கணித்துள்ளது. விவசாய உற்பத்தி, வலுவான நுகர்வோர் வளர்ச்சி, கிராமப்புற ஊதிய வளர்ச்சி உள்ளிட்டவை இதற்கு முக்கிய காரணம் என உலக வங்கி தெரிவித்துள்ளது. 
  • மேலும் 2026-27ம் நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 6.3%ஆக குறையும் எனவும் உலக வங்கி கணித்துள்ளது.
இந்திய மொபைல் மாநாட்டைத்  பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார் 
  • இந்திய மொபைல் மாநாட்டை புதுதில்லியில் உள்ள யஷோபூமியில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கிவைத்தார். ஆசியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு, ஊடகம், தொழில்நுட்பத்துறைக்கான இந்த மாநாட்டில் உரையாற்றிய பிரதமர், இதில் கலந்து கொள்வதற்காக வந்துள்ள அனைத்துப் பிரதிநிதிகளையும் வரவேற்றார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel