
3rd OCTOBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
ராமநாதபுரம் ரூ. 738 கோடி மதிப்பிலான திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் தொடக்கிவைத்தார்
- ராமநாதபுரம் பேராவூரில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின், ரூ.738 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கிவைத்தார்.
- ராமநாதபுரத்தில் ரூ. 176 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு விழா ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், பரமக்குடியில் கல்லூரி மாணவர்களுக்கான சமூக நீதி விடுதி கட்டடம், கோவிலாங்குளத்தில் பள்ளி மாணவர்களுக்கான சமூக நீதி விடுதி, தங்கச்சிமடத்தில் மேல்நிலைப்பள்ளி கட்டடங்களை திறந்துவைத்தார்.
- மேலும், ரூ. 134 கோடி மதிப்பிலான 150 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, 50,712 பயனாளிகளுக்கு ரூ. 426 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
- இந்த விழாவில், அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன், தங்கம் தென்னரசு, பெரியகருப்பன், ராஜகண்ணப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
- கரூரில் கடந்த 27ம் தேதி இரவு த.வெ.க. பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
- இந்நிலையில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த் மற்றும் சிடிஆர் நிர்மல் குமார் முன்ஜாமின் மனு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.
- இதற்கிடையே, கரூர் துயர சம்பவம் குறித்து அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணைக்குழு அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- கரூர் விவகாரம் தொடர்பாக அஸ்ரா கார்க் ஐஜி வடக்கு தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது. வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களை உடனடியாக சிறப்பு புலானய்வு குழுவினரிடம் ஒப்படைக்க கரூர் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
- உலக சாம்பியன்ஷிப் பளு தூக்குதலில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு (31 வயது) வெள்ளி வென்று சாதனை படைத்துள்ளார். உலக சாம்பியன்ஷிப்பில் இத்துடன் இவர் மூன்றாவது முறையாக பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- மணிப்பூரைச் சேர்ந்த மீராபாய் சானு 48 கிலோ எடைப் பிரிவில் உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்றுள்ளார். இதற்கு முன்பாக 2017, 2022 உலக சாம்பியன்ஷிப்பில் முறையே வெண்கலம், வெள்ளி வென்றிருந்தார்.
- தற்போது, நார்வேயில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப்பில் 48 கிலோ எடைப் பிரிவில் (84 கிலோ ஸ்நாட்ச் + 115 கிலோ க்ளீன், ஜெர்க்) மொத்தமாக 199 கிலோ பளுவைத் தூக்கி வெள்ளி வென்றுள்ளார்.
- வட கொரியாவைச் சேர்ந்த ரி சாங் கும் 213 கிலோ (91 கிலோ + 122 கிலோ) பளுவைத் தூக்கி தங்கம் வென்றார். மேலும், க்ளீன், ஜெர்க் பிரிவில் 122கிலோ பளுவைத் தூக்கி புதிய உலக சாதனையையும் படைத்துள்ளார்.
- தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த தான்யத்தோன் சுக்சரோயன் 198 கிலோ (88 கிலோ + 110 கிலோ) பளுவைத் தூக்கி வெண்கலம் வென்றார்.