
30th OCTOBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
உச்சநீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் நியமனம்
- நவம்பர் 23 ஆம் தேதியுடன் தலைமை நீதிபதியான பி.ஆர்.கவாய்யின் பதவிக்காலம் நிறைவடையும் நிலையில் உச்ச நீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதியான சூர்ய காந்த்தின் பெயரை நீதிபதி பி.ஆர். கவாய் பரிந்துரைந்திருந்தார்.
- தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்யின் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனை மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் உறுதிபடுத்தியுள்ளார்.
- இந்த நிலையில், வருகிற நவம்பர் 24 ஆம் தேதி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு முன்னிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் பதவியேற்கவுள்ளார். 53-வது தலைமை நீதிபதியான சூர்ய காந்த் 2027 ஆம் ஆண்டு பிப்ரவரி 9 ஆம் தேதி வரை பதவியில் இருப்பார்.

 
 
